scorecardresearch

மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அம்சங்கள் என்ன?

100 எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடங்களும், 60 செவிலியர் படிப்பிற்கான இடங்களும் உருவாக்கப்படும்.

Madurai AIIMS Hospital Facilities
Madurai AIIMS Hospital Facilities

Madurai AIIMS Hospital Facilities : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று கூறப்பட்ட காலத்தில் இருந்தே, எங்கே அமையப் போகின்றது? எப்போது அதற்கான வேலைகள் தொடங்கும் ? எப்போது பயன்பாட்டிற்கு வர உள்ளது என்பது தொடர்பாக நிறைய கேள்விகள் மக்கள் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

Madurai AIIMS Hospital Facilities

முதல் இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது. மதுரை தோப்பூரில் அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை. அதன் அடிக்கல் நாட்டுவிழா இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற உள்ளது. பணிகள் எல்லாம் 2022க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.

தோப்பூரில் சுமார் 262.62 ஏக்கர் பரப்பளவில், 1264 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது இந்த மருத்துவமனை. இதில் 15 முதல் 20 அதிநவீன சிகிச்சைப் பிரிவுகளும், அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அமைய உள்ளது.

750 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாள் ஒன்றிற்கு 1500 நபர்களுக்கு வெளி நோயாளிப் பிரிவில் சிகிச்சை அளிக்கவும், மாதம் ஒன்றிற்கு 1000 நபர்களுக்கு உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கவும் தேவையான வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

மேலும் மருத்துவ வளாகத்தின் உள்ளே நிர்வாகம், தங்கும் விடுதிகள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை உருவாக்கப்பட உள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – கல்வி

இங்கு 100 எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடங்களும், 60 செவிலியர் படிப்பிற்கான இடங்களும் உருவாக்கப்படும். மேலும் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற நீண்ட கால திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க : மதுரைக்கு அடுத்த அடையாளம்.. ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை..மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madurai aiims hospital facilities are listed here