Madurai Avaniyapuram Jallikattu started today : காலை 8 முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற இருக்கும் இந்த போட்டிகளில் பங்கேற்க 700 காளைகளும், 730 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்திருக்கும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தனர்.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…
பல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்…
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஜல்லிக்கட்டு விழாவில் வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பலரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த ஆண்டில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும். இந்த போட்டிகள் அனைத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான கண்காணிப்பு குழுவின் கீழ் நடைபெற்றது.
பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் விவசாயிகள் சங்கம் சார்பில் தான் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஏ.கே. கண்ணன் என்பவர் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கினை நாகேஸ்வரராவ் மற்றும் ஹேமந்த் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து அறிவித்தது.
இந்த நிலையில், அவனியாபுரத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று காளைகளை அணைந்து வெற்றி பெற்ற மாடுபடி வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள்க வழங்கப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அணைந்த விஜய், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். இதுபோல, 13 காளைகளை அடக்கிய பாரத், 8 காளைகளை அடக்கிய திருநாவுக்கரசு ஆகியோரும் சிறந்த வீரர்களாக தேர்வாகினர். போட்டியின்போது, காளைகள் முட்டியதில் 71 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.