scorecardresearch

சூரிய கிரகணம் – மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு

இன்று சூரிய கிரகணம் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு

சூரிய கிரகணம் – மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சூரியகிரகணம் மாலை 5.23 மணிக்கு தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அதன் 22 உபகோயில்களில் இன்று நடை சாத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்: டாஸ்மாக்-ல் தீபாவளி வசூல் ரூ708 கோடியா? சட்ட நடவடிக்கை எடுப்போம்: செந்தில் பாலாஜி எச்சரிக்கை

மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி பூஜை காலத்தில், உச்சிகாலம் மற்றும் சாயரட்சை ஆகிய பூஜைகள் நடைபெற்று கோவில் நடை காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை சாத்தபடுவதால் பொது மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு இன்று ஒரு நாள் மட்டும் இரவு 07.00 மணிக்குப் பின் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காலை 11 மணிக்கு நடை சாத்தப்பட்டதால் வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் கோபுர வாசலில் நின்று வணங்கி சென்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madurai meenakshi amman temple closed due to solar eclipse

Best of Express