திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர், புகாரளித்த பெண்ணிடம் நள்ளிரவில் போன் செய்து விசாரணை நடத்தியதால், அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு
அந்த இன்ஸ்பெக்டர் முன்பு முன்பு பணியாற்றிய காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்துகள் செய்வது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது, புகார் அளிக்கும் பெண்களிடம் நள்ளிரவில் செல்போனில் புகார் குறித்து விசாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.
மேலும் ஊரடங்கு காலத்தில் பொது இடங்களில் சுற்றிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அதனை விடுவிக்க தனக்கு வேண்டிய ஒரு புரோக்கர் மூலம் பணம் பெற்றுக்கொண்டு பிடிபட்ட வாகனங்களை திருப்பி தந்ததாகவும் மக்களிடமிருந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் குவிந்தன. அத்துடன் போலீஸ் நிலையத்தில் பணியில் உள்ள பெண் போலீசாரிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், ஒருமையில் அவர்களை திட்டுவதாகவும் புகார்கள் சென்றன.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் அவர் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது, புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் செல்போனில் அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். அவர், அடிக்கடி நள்ளிரவில் அந்தப் பெண்ணிடம் பேசியதால், உடனடியாக அப்போதைய திருச்சி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார் அந்தப் பெண்.
இதுபற்றி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வந்த புகார் உண்மை என்று தெரியவரவே, அவருக்கு கடந்த மாத இறுதியில் கட்டாய பணி ஓய்வு வழங்க டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே டி.ஐ.ஜி. சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு அந்த உத்தரவு நகல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
போலி இ-பாஸ் வழங்கிய வழக்கு; கைதான அதிகாரிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
மேலும் தனக்கு பணி ஓய்வு வழங்கப்பட்ட, உத்தரவு நகல் வருவதை அறிந்த இன்ஸ்பெக்டர், கடந்த சில நாட்களாக காவல்நிலையத்திற்கு வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் பணிக்கு வந்த அவருக்கு கட்டாய பணி ஓய்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”