கொரோன வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வறுகின்றது. பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீட்டில் இருந்து வெளியெ வரும்போது கட்டாயமாக முககவசம் அணிந்துவர வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.போதுமான முககவசங்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்திலேயே முதன்முறையாக தானியங்கி முககவசம் அளிக்கும் கருவியே தூத்துகுடியில் அறிமுகம் ஆகியுள்ளது.இதனை ராஜாஜி பூங்கா மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்.ஐந்து ரூபாய்க்கு ஒரு மாஸ்க்கினை பெற்றுக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
ஒரே நேரத்தில் 120 மாஸ்க்குகளை வைக்கமுடியும் என மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது மாநகராட்சி நகர் நல அலுவலர் எஸ்.அருண்குமார் உடன் இருந்தார். மக்களின் வரவேற்ப்பை பார்த்து மற்ற இடங்களிலும் இந்த கருவியை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil