மெட்ரோவின் ஜில் அறிவிப்பு... நாளைக்கு மெரினா போவதும் ரொம்ப ஈஸி!

விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளுக்கு தமிழகம் முழுவதும் வழிபாடு

விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளுக்கு தமிழகம் முழுவதும் வழிபாடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாப்கார்னும் சமோசாவும் தான் மிஸ்ஸிங்- ஆனா மெட்ரோவில் இனி தினமும் படம் பார்க்கலாம்!

இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு நல்ல நண்பனாக இருக்கும் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் மெரினா கடற்கரையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு பொதுமக்கள் சிரமம் ஏதுமின்றி மெரினாவில் காணும் பொங்கலை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ரஜினி கமலின் கலவையே தனுஷ்: தெறிக்கவிடும் பட்டாஸ்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மாற்று உடையில் தீவிர கண்காணிப்பினை மேற்கொள்வார்கள் என்றும், சிறப்பு ரோந்து வாகனங்கள் பணியில் அமர்த்தபப்டும் என்றும், சிசிடிவி கேமராக்கள் மூலம் நிகழ்வுகளை ஆராயவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். காணும் பொங்கலின் போது மாநகர காவல்துறையினர் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர். சிறப்பு காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினரும் இவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்.

50% சலுகை கட்டணம்

இந்த ஆண்டின் துவக்கம் முதலே, அரசு விடுமுறை நாட்களின் போது இயக்கப்படும் மெட்ரோ சேவைகளில், பயணக்கட்டணம் பாதியாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கலை முன்னிட்டு 15,16,17 தேதிகளில் பயணக்கட்டணத்தில் 50% தள்ளுபடி அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.  மேலும் நாளை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல சிறப்பு ஏற்பாடுகளையும் மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. டி.எம்.எஸ் மற்றும் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலமேட்டில்  துவங்கியது ஜல்லிக்கட்டு

நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது போன்று இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 700 காளைகளும், 936 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்து வருகின்றனர். போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முறையே மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் படிக்க :தாராவியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் ! புகைப்படத் தொகுப்பு

Advertisment
Advertisements
Metro Rail

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: