Advertisment

”என் மனைவி கூகுள் மேப்பை பாத்து சந்தேகப்படுறாங்க சார்”... கூகுள் மீது கணவர் புகார்!

கூகுள் மேப் மைசூரில் இருந்து ஊட்டி வந்த குடும்பத்தை காட்டுக்குள் நிற்கவைத்தும் இல்லாமல், இரவெல்லாம் நடு சாலையில் தூங்க வைத்ததெல்லாம் உலகம் அறிந்த கதை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mayiladuthurai man complaints Google Maps for giving false your timeline history

Mayiladuthurai man complaints Google Maps for giving false your timeline history

Mayiladuthurai man complaints Google Maps for giving false your timeline history : மயிலாடுதுறை லால் பகதூர் பகுதியை சேர்ந்தவர் ஆர். சந்திரன். அங்கிருக்கும் பெரிய கடை வீதியில் வணிகம் செய்து வருகிறார். இவர் எங்கெல்லாம் சென்றுவிட்டு வீடு திரும்புகிறார் என்பதை ஆராய, அவருடைய மனைவி ஒரு தனி வழியை வைத்திருக்கிறார்.

Advertisment

அவர் வியாபாரம் முடிந்து வீடு வந்ததும், அவரின் ஸ்மார்ட்போனை வாங்கி, அவர் எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்பதை கூகுள் மேப்பின் யுவர் டைம் லைனில் செக் செய்வாராம். சில நேரங்களில் சந்திரன் செல்லாத இடங்களையும் கூகுள் மேப் டைம் லைனில் காட்ட, மனைவி சந்தேகத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்று சந்திரனுடன் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்திருக்கிறது.

மேலும் படிக்க : அடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு! என் புத்திய…

கூகுள் பற்றி தான் நமக்கு தெரியுமே, மைசூரில் இருந்து ஊட்டி வந்த குடும்பத்தை முச்சந்தியில் நிற்கவைத்தும் இல்லாமல், இரவெல்லாம் நடு சாலையில் தூங்கியதெல்லாம் உலகம் அறிந்த கதை.இதற்கிடையில் நேற்று வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணவனின் மொபைல் போனை வாங்கி நோட்டம் விட்டிருக்கிறார் மனைவி. சந்திரன் செல்லாத இடத்திற்கு சென்றதாக கூகுள் கதை சொல்ல நேற்றும் பிரச்சனை.

மேலும் படிக்க : ‘இணையவசதி இல்லாமலேயே கூகுள் மேப்’ : பயன்படுத்தும் வழிமுறை இதோ…

ஓயாத பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதி வழங்கவும், நஷ்ட ஈடு வேண்டும் எனவும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மன உளைச்சல், குடும்பத்திற்குள் குழப்பம், சித்திரவதை மற்றும் வன்முறைகளுக்கு கூகுளே காரணமாக இருக்கிறது என்று வருத்தத்துடன் கூகுள் மீது கேஸ் கொடுத்திருக்கிறார் இந்த நபர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Mayiladuthurai Google Maps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment