Advertisment

அடேய் கூகுள் மேப்... உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு! என் புத்திய...

கர்நாடகாவில் இருந்து வந்த வேன் சந்து பொந்து இண்டு இடுக்கு என வழி தெரியாத பாதையில் சிக்கிக் கொண்டது தான் மிச்சம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google maps led karnataka family to struck

Google maps led karnataka family to struck

முன்பு போல் இல்லாமல் இந்த காலங்களில் தெரியாத இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வது மிகவும் எளிமையாக மாறிவிட்டது. செல்லும் வழியை தெரிந்து கொள்ள கூகுள் மேப். போனவுடன் தங்குவதற்கு ஆன்லைன் புக்கிங். தேவையான உணவுகளும் தங்கும் இருப்பிடம் வந்து சேர்ந்துவிடும். ஆனால் அனைத்து நேரங்களிலும் இந்த தொழில்நுட்ப வசதிகள் உங்களுக்கு கைக்கொடுக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய சூழலும் தற்போது உருவாகியுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : உங்களின் ‘ட்ரீம் டெஸ்டினேசனிற்கான’ சுற்றுலாவை எளிமையாக்க டிப்ஸ் இதோ!

கர்நாடகாவின் மைசூரில் இருந்து உதகமண்டலம்  செல்வதற்காக மினி வேன் ஒன்றில் ஒரு குடும்பம் பயணித்திருக்கிறது. இரவில்  கிளம்பி அதிகாலை உதகையை கண்டு ரசித்தால் ரம்மியமாக இருக்கும்  என்று திட்டமிட்டவர்கள் தங்களுடைய பயணத்தை துவங்கினர். பாதி வழியில் பசிக்கிறது என்று ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் பயணத்தை துவங்கியுள்ளனர். சாலைகள், சைன்போர்ட் ஆகியவற்றை பார்ப்பதற்கு சிரமாக இருக்கும் அளவுக்கு இந்த மாதங்களில் அங்கு கடும் பனிப்  பொழிவு இருக்கும். அதனால் கூகுள் மேப்பில் டெஸ்டினேசனை போட்டுவிட்டு வண்டியை கிளப்பியுள்ளனர்.

அதிகம் சத்தம் கொண்ட மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்.. காரணத்தை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்! 

கூகுள் மேப் கூறிய சந்து, பொந்து, இண்டு,  இடுக்கு என மாறி மாறி சென்றுள்ளனர். உதகை வந்ததா என்று கேட்காதீர்கள். குறுகலான முட்டு சந்து தான் வந்தது. அந்த முட்டுச் சந்தின் முகப்பில் கட்டிடங்கள் கட்டி அதனை தாண்டி செல்ல வழியில்லாமல் செய்துவிட்டது. சரி, ரிவர்ஸாவது எடுத்து வேறு வழியில் செல்வோம் என்று யோசனை செய்து வண்டியை எடுத்த போது அந்த குறுகலான  சந்தில் வாகனம் செல்லவே இல்லை. வேறு வழியின்றி இரவில் அங்கேயே படுத்துறங்கியுள்ளனர். அதிகாலையில் அந்த வாகனத்தை கிரேன் மூலம் தூக்கி சாலையில் விட்டுள்ளனர். அடுத்த முறை பயணம் போகும் போது கொஞ்சம் முன் யோசனையுடன் செல்லுங்க மக்களே!

மேலும் படிக்க : பெங்களூரில் இருந்து மைசூரை அடைய 45 நிமிடங்கள் மட்டுமே! புதிய திட்டத்தின் பலன்கள் இதோ!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Mysore Ooty Travel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment