Budget friendly travel tips to follow to save your money : புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வது எப்போதுமே உற்சாகம் ஊட்டக் கூடியது. புதிய காட்சிகளை பார்ப்பது, புதிய நண்பர்களை சந்திப்பது மற்றும் அவர்கள் உடன் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவது. கோடை காலம் நெருங்கும் நிலையில் நாம் அனைவரும் நமது கனவு சுற்றுலாதலத்துக்கு போவதுக்கான திட்டமிடவோ அல்லது அதை பற்றி பகல்கனவு காணவோ தொடங்கி இருப்போம்.
- எதற்காக நாம் பயணம் செல்ல வேண்டும் என எண்ணி பார்க்க வேண்டும்
- உங்கள் விடுமுறை முன்னுரிமைகளை பட்டியலிட தொடங்குங்கள்
- வித்தியாசமான கலாச்சாரம் மற்றும் உணவுகளை அனுபவிக்க
- பொழுதுபோக்குகாக
- இடங்களை சுற்றிப் பார்க்க – வரலாற்று நினைவு சின்னங்களைப் அல்லது அமைதியான தியான மையங்களைப் பார்க.
- புதிதாக எதாவது ஒன்றை படிக்க
இதில் எதை விடுமுறை நாட்களில் செய்ய வேண்டும் என நாம் சரியாக தேர்ந்தெடுத்தவுடன் அதை எவ்வாறு நன்றாக செய்து முடிக்கலாம் என்பதில் கவனம் செலுத்தலாம்.
மேலும் படிக்க : வருமான வரியை சேமிக்க உதவும் ஃபிக்சட் டெபாசிட்களை எந்த வங்கியில் துவங்கலாம்?
குறுகிய நாட்களிலான சுற்றுலாவை தேர்ந்தெடுங்கள்
பொழுதுபோக்குக்காக அல்லது ஏதாவது ஒன்றை படிப்பதற்கான என எதற்காக நாம் சுற்றுலா சென்றாலும் அதை குறுகிய சுற்றுலாவாகவே திட்டமிடுங்கள். அடுத்தடுத்து குறுகிய சுற்றுலா சென்றுவந்தால் அவ்வப்போது சந்தோஷமாக இருக்கவும், அதிகம் அழகான இடங்களை பார்க்கவும், அதிகம் சிலிர்ப்படையவும் உதவும்.
விடுமுறை வாடகை
சுற்றுலா செல்லும் போது ஹோம் ஸ்டே, Airbnb போன்றவை மூலம் அறை எடுத்து தங்குவதால் குறைவான போரங்கள் மூலம் நல்ல தங்கும் இடங்கள் அமையும். இது போன்ற தங்கும் இடங்கள் குடும்பம் போன்ற பெரிய குழுக்களுக்கு தங்குவதற்கு மிகவும் விலை மலிவாகவும், சமையல் அறை வசதியுடனும் நாம் தங்கும் மாநகரத்தின் மத்தியில் கிடைத்துவிடும். மேலும் இவ்வகை தங்கும் இடங்களில் தங்கும் போது உள்ளூர் பயண செல்வும், உணவும் செலவும் கணிசமாக குறைந்துவிடும்.
மேலும் படிக்க : ரூ.10 லட்சத்துக்கு மேல் விலையுள்ள சொத்து வாங்கவோ விற்கவோ பான் கார்ட் கட்டாயம்!
குறைவான பயண சாமான்களை எடுத்து செல்லுங்கள், வரவு செலவு திட்டத்தை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். விடுமுறை கால பயணம் என்பது நமது மூட்டை முடிச்சுகளை விட்டு விட்டு புதிய அனுபவத்தை தேடி பயணிப்பதாகும். எப்போதுமே விடுமுறை பயணம் மேற்கொள்ளும் போது குறைவான பயண சாமன்களை எடுத்துச் செல்லுங்கள் ஆனால் உங்களுக்கு தேவையான அத்தியாவாசிய சாமான்களை எடுத்து செல்ல மறந்து விடாதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”