Tax saving bank fixed deposits schemes : வரி சேமிப்புக்கான வங்கி நிரந்தர வைப்புத் தொகை : எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றில் சிறந்தது எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் வரி சேமிப்புக்கான முதலீடுகள் என்று பார்க்கும் போது நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் தான் வரிசையில் முதலில் வந்து நிற்கும். வங்கி சார்ந்த முதலீட்டுத் தயாரிப்பு என்பதாலும் அதில் உள்ள குறைந்த ஆபத்து மற்றும் நிறைவான பாதுகாப்பான தன்மை ஆகியவற்றால், முதலீட்டாளர்கள் நிரந்தர வைப்புத் தொகையையே அதிகம் நம்புகின்றனர்.
மேலும் படிக்க : ரூ.10 லட்சத்துக்கு மேல் விலையுள்ள சொத்து வாங்கவோ விற்கவோ பான் கார்ட் கட்டாயம்!
வருமான வரி சட்டம் 1961 ல் உள்ள பிரிவு 80C ன் படி வருமான வரி தாக்கலின் போது வரி கழிப்பு பெற நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு என்பதே சிறந்த வழி.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் ஆக்ஸிஸ் போன்ற வங்கிகள் வரி சேமிப்புக்கான வைப்புத் தொகை திட்டங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகள் வழங்கும் வைப்புத் தொகை திட்டங்களின் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படுகிறது. சாதாரண மக்களுக்கு 6 முதல் 6.50 சதவிகிதம் வரையும் மூத்த குடிமக்களுக்கு 7 சதவிகிதம் வரையும் வட்டி வழங்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
எஸ்பிஐ வங்கியின் வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு வைப்பு காலம் குறைந்தது 5 வருடங்கள். முதலீட்டாளர்கள் வருடத்துக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்து வருமான வரி சட்டம் பிரிவு 80C ன் படி அனுகூலங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு தற்போது ஆண்டுக்கு சாதாரண நபர்களுக்கு 6 சதவிகிதமும் மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.
மேலும் படிக்க : Jio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது?
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி இரண்டு வகையான வரிசேமிப்பு நிரந்தர வைப்புத் தொகை திட்டங்களை வழங்குகிறது -பாரம்பரிய திட்டம் மற்றும் மறு முதலீட்டுத் திட்டம். இத்திட்டங்களில் சாதாரண நபர்களுக்கு 6.40 சதவிகித வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.90 சதவிகித வட்டியும் வழங்கப்படுகிறது.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கி வழங்கும் வரி சேமிப்புத் திட்டத்தில் வழக்கமான முதலீட்டாளர்களுக்கு 6.30 சதவிகித வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 6.80 சதவிகித வட்டியும் வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் துவக்கத்தில் குறைந்தது 100 முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி மூன்று விதமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டங்களை வழங்குகிறது. காலாண்டு, மாதாந்திர மற்றும் மறுமுதலீட்டுத் திட்டம். மற்ற வங்கிகளைப் போல் சாதாரண நபர்களுக்கு 6.50 சதவிகித வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7 சதவிகித வட்டியும் வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"