ஜெயலலிதா நினைவு தினம் : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஜெயலலிதா நினைவு தினம் : ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
நாளை செல்வி ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி. அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று நடைபெற்று வருகிறது.
நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்தவர்கள் உட்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சையான கருத்துகளை வெளியிடக் கூடாது என ஊடகங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும் படிக்க : அப்பல்லோவில் விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம்