மேட்டூர் அணை : கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 2 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
மேட்டூர் அணை கனஅடி :
கடந்த சில மாதங்களாக கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடஜாவிக் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.08 அடியாக இருந்தது. இதேபோன்று நீர் இருப்பு 92.01 டி.எம்.சி.யாக இருந்தது.
ஆனால் தற்போது அணை நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 70 ஆயிரம் கனஅடியில் இருந்து 1.24 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.கடந்த மாதம் 24-ந் தேதி அணை நிரம்பியது. தற்போது 2-வது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை
இன்று பிற்பகல் முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.