கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியதுகபினி அணை. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது, இந்த நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் தற்போது கபினி அணியில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் ஒகேனக்கல்லில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், இந்த ஆண்டு 2-ஆவது முறையாக அணை நிரம்பியுள்ளது.
இந்நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆற்றங்கரை அருகில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 45-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.