அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை கோரி சிறுவன் புகார் - அமைச்சர் சமரச பேச்சுவார்த்தை
Boy complaint against minister Dindugul Sreenivasan : காவல்துறையினர் சிறுவனின் புகாரை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
Boy complaint against minister Dindugul Sreenivasan : காவல்துறையினர் சிறுவனின் புகாரை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனது காலணிகளை பழங்குடி சிறுவர்களை அழைத்து கழற்றிவிடச்செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Advertisment
தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்ற வைத்து அவமானப்படுத்திய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் காலணியை கழற்ற அறிவுறுத்தப்பட்ட பழங்குடியின சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Advertisment
Advertisements
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
அமைச்சர் சீனிவாசன் மீது நடவடிக்கை கோரிக சிறுவன் அளித்துள்ள புகார்...
அமைச்சர் சீனிவாசன் மீது நடவடிக்கை கோரிக சிறுவன் அளித்துள்ள புகார்...
அந்த புகாரில் சிறுவன் குறிப்பிட்டுள்ளதாவது, 'யானை முகாம் விழாவிற்கு வந்த வனத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் என்னை ஒருமையில் பேசியதோடு தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட உத்தரவிட்டார். அமைச்சர் சொல்கிறார் என்பதாலும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அருகில் இருந்ததால் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டேன். என் நண்பனும் அப்போது அமைச்சரின் அருகில் வந்தான். இந்த காட்சிகள் பிரபலமானதையடுத்து எனக்கு அவமானம் ஏற்பட்டது. இதனால் நான் வீட்டிலே அழுது கொண்டிருந்தேன். அங்கிருந்த அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த சம்பவத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் எனக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை அமைச்சர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் சிறுவனின் புகாரை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சமரச பேச்சுவார்த்தை : முதுமலையில் அமைச்சர் காலணியை அகற்ற சிறுவனை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த சிறுவனுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.