Advertisment

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே இணைப்பு பாலம்; சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

குமரி கடல் பரப்பில் உள்ள திருவள்ளுவர் சிலை பாறைக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற் பரப்பிற்கும் கண்ணாடி இழை பாலம் அமைக்க அனுமதி – அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thiruvalluvar statue

கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரிக்கு தினம், தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கடல் நடுவே இருக்கும் திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றை பார்க்க சுற்றுலா பயணிகள் படகில் சென்று வருகின்றனர்.

Advertisment

ஆனால் கடலில் இயற்கையாக ஏற்படும் கடல் நீர் உள்வாங்கும் காலங்களில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் படகு, திருவள்ளுவர் சிலை பாறைக்கு செல்லமுடியாத சூழல் உள்ளது. இந்த நிலை ஏற்படும் போதொல்லாம் தமிழ் மொழி பேசும் மக்கள் மனதில் ஏற்படும் வேதனை, இவ்வளவு தூரம் கன்னியாகுமரி வந்தும் உலகப் பொதுமுறை தந்த ஐயன் வள்ளுவன் பாதம் தொட்டு வணங்க முடியவில்லையே என்பதாக உள்ளது. இந்த நிலை கடந்த பல காலமாக உள்ளது.

இதையும் படியுங்கள்: கோவையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ10 உயர்வு; அமலுக்கு வந்தது புதிய சட்டம்

இந்தநிலையில், தமிழக சட்டமன்றத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஏப்ரல் 1) ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தமிழக முதல்வர் ரூ.37 கோடி நிதி ஒதுக்கீட்டில் குமரி கடல் பரப்பில் உள்ள திருவள்ளுவர் சிலை பாறைக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற் பரப்பிற்கும் கண்ணாடி இழை பாலம் அமைக்க அனுமதி அளித்துள்ளார். விரைவில் இரண்டு பாறைகளுக்கு இடையே இருக்கும் கடல் நீர் பரப்பில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்படும். கடல் பாறைகளுக்கு இடையே உள்ள இணைப்பு பாலம் பணி முழுமையாக நிறைவடைந்து, 2024 ஜனவரி முதல் சுற்றுலா பயணிகள் பயன் பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கண்டு குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி அமைப்பினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சர் எ.வ.வேலுவுக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மற்றும் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கும் அவர்களது மகிழ்ச்சி மற்றும் நன்றியை தெரிவித்தார்கள்.

த.இ.தாகூர்., கன்னியாகுமரி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment