ஹெச்.ராஜா மீது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை: ஹெச்.ராஜா மீது சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். போலீஸாருடன் கடும் வாக்குவாதம் செய்ததுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஹெச்.ராஜா பேசிய வீடியோ வெளியானதை தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

மேலும் படிக்க: நீதிமன்றத்தை அவமதித்தாரா ஹெச்.ராஜா?

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் முதல்வருடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், காமராஜ், அன்பழகன் உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர்.

மேலும் படிக்க: ஹெச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இதன் பின்னர் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் ஏழு பேரின் விடுதலை குறித்து அமைச்சர்கள் கூறுகையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி ஆளுநர் நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடவில்லை எனக் கூறினர்.


சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் புகார் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம் எனக் கூறினார்.

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்:

மேலும் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுக்கோட்டையில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஹெச். ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.

மேலும் படிக்க: நான் அப்படி சொல்லவே இல்லையே! ஜகா வாங்கிய ஹெச்.ராஜா

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close