மிஸ் இந்தியாவாக தேர்வான பொண்ணு அனுக்ரீத்தி வாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சமீபத்தில் நடந்த ’மிஸ் இந்தியா 2018’ அழகி போட்டியில் திருச்சியை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், மிஸ் இந்தியா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை லயோலா கல்லூரியில், பிஏ படித்து வரும் மாணவியான அனுக்ரீத்தி பல தடைகளை கடந்து மிஸ் இந்தியா மகுடத்தி சூடினார். சமீபத்தில் சென்னை திரும்பிய அனுக்ரீத்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தனர்.
குறிப்பாக அனு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சரளமாக தமிழில் பேசு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக அனுக்ரீத்தி குறித்த பக்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்நிலையில் அனுக்ரீத்தி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று தமிழக முதல்வர் பழனிசாமியைன் நேரில் சந்தித்தார்.
மிஸ் இந்தியா’ பட்டம் அனுக்ரீத்தியை தேடி வந்தது எப்படி தெரியுமா?
மிஸ் இந்தியா மகுடத்துடன் வந்த அனுக்ரீத்தியை முதல்வர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றார். பின்பு அவரை வாழ்த்திய முதல்வர், அடுத்த ஆண்டு நடைப்பெறவுள்ள உலக அழகி போட்டியில் வெற்றி பெறவும் அனுக்ரீத்தியை வாழ்த்தினார்.
தமிழின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்துவிடாது!
இதுக்குறித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.