மக்களவை தேர்தல் தமிழக களத்தில் பரபரக்க ஆரம்பித்து இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதற்கு அடித்தளமிட்டிருக்கிறது பாமக கட்சி. சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை + 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மக்களவை தொகுதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என ஓ.பி.எஸ் அறிவித்தார்.
அதன்பின் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 10 கோரிக்கைகளை அதிமுக அரசிடம் முன் வைத்து இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம். இது மகா கூட்டணியாக இருக்கும். 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறும்" என்றார்.
இந்நிலையில், அதிமுக - பாமக கூட்டணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சமீபத்தில் தான் அதிமுக அரசை விமர்சித்து ராமதாஸ் புத்தகமே வெளியிட்டு இருந்தார். தவிர, அதிமுக அரசை எப்போதும் கடுமையாக விமர்சித்தே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கையெழுத்திட்டிருக்கிறார். வெட்கம் இல்ல..? சூடு இல்லை..? சொரணை இல்ல? இந்தக் கூட்டணியின் முடிவு என்னவாகப் போகிறது என்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு தெரிந்து கொள்வீர்கள். 2009ல் கூட்டணி அமைத்த அதிமுக, பாமக கூட்டணி அப்போதே ஒரு தோல்விக் கூட்டணி" என்றார்.
மேலும் படிக்க - பாஜக - அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை Live Updates