ஸ்டாலின் சீதாராம் யெச்சூரி சந்திப்பு : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர். வருகின்ற 2019ம் ஆண்டு, பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிற்கு எதிராக அனைத்துக் எதிர்க் கட்சியினரும் ஒரே அணியில் இணைய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சி செய்து வருகிறார்.
அதன் நீட்சியாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய கான்பிரன்ஸ் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரை சந்தித்து பேசினார்.
மேலும் படிக்க : காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு
இந்நிலையில் கடந்த 9ம் தேதி சந்திரபாபு நாயுடு ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் முக ஸ்டாலின் இல்லத்தில் முக ஸ்டாலினை சந்தித்துப்பேசினார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
ஸ்டாலின் சீதாராம் யெச்சூரி சந்திப்பு இன்று நடைபெறுகிறது
இந்நிலையில் இன்று மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியுள்ளார். இந்த சந்திப்புக் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று (13-11-2018) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, 2019-ல் வரவிருக்கும் பொதுத் தேர்தலில், மத்தியில் ஆளும் மதவாத பாசிச பாஜக அரசை இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வீழ்த்துவது குறித்து கலந்துரையாடினோம்!" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.