DMK New Chief MK Stalin: மு.க. கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுக-வின் 2ம் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து, அவர் கடந்து வந்த அரசியல் வாழ்க்கையின் தொகுப்பு இதோ.
DMK New Chief MK Stalin: மு.க. ஸ்டாலின் கடந்த வந்த பாதை:
பிறப்பு :
- 1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கருணாநிதி - தயாளு அம்மாளுக்கு 3வது மகனாக பிறந்தார்.
- ரஷ்ய அதிபர் 'ஜோசப் ஸ்டாலின்' நினைவாக தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார் கருணாநிதி.
மு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர் குறித்த செய்திக்கு:
கல்விப் பருவம்:
- சென்னை சர்ச் பார்க் பள்ளியில் ஸ்டாலினை சேர்ப்பதற்கு விண்ணப்பித்தபோது, அவரின் பெயருக்காகவே விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
- இதனை தெரிவித்தபோது, மாற்ற வேண்டியது பள்ளியை தான் பெயரை அல்ல என்று கூறினார் கருணாநிதி.
- பின்னர் ஸ்டாலின் கிறிஸ்துவ மேனிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
குடும்பம் :
- 1975ம் ஆண்டு துர்கா என்கிற சாந்தாவை திருமணம் செய்து கொண்டார் ஸ்டாலின்.
- இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும்,செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.
- மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உள்ளார்.
அரசியல் பிரவேசம் :
- 1967ம் ஆண்டு, 14 வயதிலேயே அரசியலில் தந்தையுடன் இணைந்து கால் பதித்தார் ஸ்டாலின். அப்போது திமுக முதல் முறையாக ஆட்சி அமைத்திருந்தது.
- 1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.முக.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக்கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
- 1973ம் ஆண்டு திமுக-வின் பொதுக்குழு உறுப்பினரானார்.
- 1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று முதன்முறையாக நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும், ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
ட்விட்டரில் ட்ரெண்டாகும் ”DMKThalaivarStalin" - மகிழ்ச்சியில் தொண்டர்கள்
அவசரக் காலச் சட்டத்திற்கு பிறகு:
- 1975ம் ஆண்டு அவசரக் காலச் சட்டத்தின்போது உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
- 1984ம் ஆண்டு திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார்.
- இளைஞர் அண்டி செயலாளராக இருந்தபோது, 1984ம் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியை தழுவினார்.
- பின்னர் அதே தொகுதியில், 1989ம் ஆண்டு தேர்தலில் வெற்றியடைந்து சட்டப்பேரவைக்குள் கால் பதித்தார்.
ராஜிவ் காந்தி கொலைக்கு பின் ஆட்சி கலைப்பு:
- 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அப்போது இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
- 5 ஆண்டுகளுக்கு பின்பு, 1996 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் வெற்றியை தழுவினார் ஸ்டாலின்.
- பின்பு, உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமை இவருக்கே உரியது.
மீண்டும் சட்டப்பேரவைக்குள் ஸ்டாலின்:
- 2001 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே, மூன்றாவது முறையாக வெற்றிப்பெற்று சட்டப்பேரவைக்குத் தேர்வானார். அதே ஆண்டு மீண்டும் சென்னை மேயர் பதவி வகித்தார்.
- ஆனால், 2002ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தால் மேயர் பதவியலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், எம்எல்ஏவாகத் தொடர்ந்து இருந்தார்.
திமுக பொருளாளர் மற்றும் துணை முதல்வர் பதவி ஏற்பு:
- 2006 பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் 4ஆவது முறையாக வெற்றியடைந்த ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
- 2008ஆம் ஆண்டு திமுக பொருளாளராக பொறுப்பேற்றார்.
- 2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
- 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.
செயல் தலைவர் ஆனார் ஸ்டாலின் :
- 2017ம் ஆண்டு ஜனவரி முதல் திமுக தலைவராக இருந்த மு.க. கருணாநிதியின் உடல்நலம் பாதிப்படைந்தது. அப்போது கருணாநிதியால் கட்சி வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட முடியவில்லை.
- அப்போது திமுக - வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின்.
திமுக - வின் புதிய 2ம் தலைவர் ஸ்டாலின்:
- முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் மனு தாக்கல் செய்தால்.
- திமுக தலைவர் பதவிக்கு எவ்வித போட்டியுமின்றி நேரடியாக தேர்வானார்.
- இன்று திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டு அங்கு கட்சியின் புதிய தலைவர் ஸ்டாலின் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.