பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இன்றைய மன் கி பாத் உரையில் கோவை ஆனைகட்டி பகுதியில் பழங்குடியின பெண்கள் இணைந்து டெரகோட்டா எனப்படும் களிமண்ணால் ஆன டீ கப்புகளை தயாரிக்கும் முயற்சியை சுட்டிக்காட்டி பாராட்டினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-30-at-17.44.55-1.jpeg)
பிரதமர் மன் கி பாத் உரையில் தங்களை குறித்து சுட்டிக்காட்டியது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தங்களது பணிகளை மேலும் முன்னெடுக்க பாரத பிரதமரின் வார்த்தைகள் ஊக்குவிக்கும் எனவும் 'தயா சேவா சதன்' அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி சௌந்தரராஜன் மற்றும் பழங்குடியின பெண்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தி.மு.க செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் – அர்ஜூன் சம்பத்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டி பகுதியில் செயல்பட்டு வரும் 'தயா சேவா சதன்' என்கிற அமைப்பின் மூலம் பழங்குடியின பெண்கள் இணைந்து களிமண்ணை பயன்படுத்தி டீ கப்புகளை தயாரித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-30-at-17.44.55.jpeg)
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இந்த வகை டீ கப்புகளுக்கு வரவேற்பு பெருகி வருகிறது. குறிப்பாக, கத்தார் நாட்டைச் சேர்ந்த காபி விற்பனை நிறுவனம் இவர்களுக்கு பத்தாயிரம் களிமண்ணால் செய்யப்பட்ட டீ கப்புகளை தயாரிப்பதற்கான ஆர்டர்களை வழங்கி தயாரிப்புகள் அனுப்பப்பட்டு வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-30-at-17.44.57.jpeg)
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இன்றைய மன் கி பாத் உரையில் கோவை ஆனைகட்டி பகுதியில் பழங்குடியின பெண்கள் இணைந்து டெரகோட்டா எனப்படும் களிமண்ணால் ஆன டீ கப்புகளை தயாரிக்கும் முயற்சியை சுட்டிக்காட்டி பாராட்டினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-30-at-17.44.54.jpeg)
பிரதமர் மன் கி பாத் உரையில் தங்களை குறித்து சுட்டிக்காட்டியது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தங்களது பணிகளை மேலும் முன்னெடுக்க பிரதமரின் வார்த்தைகள் ஊக்குவிக்கும் எனவும் 'தயா சேவா சதன்' அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி சௌந்தரராஜன் மற்றும் பழங்குடியின பெண்கள் தெரிவிக்கின்றனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil