போதை, திருட்டுக்கு அடிமையான மகனை கொன்று வீசிய தாய் : தேனியில் பரபரப்பு
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையானதால் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையானதால் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போதைக்கு அடிமையான மகனை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் 20-களின் இறுதியில் இருக்கும் பொறியியல் பட்டதாரி. இந்த சம்பவம் தேனியை அடுத்த கம்பத்தில் நடந்துள்ளது.
கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில், தொட்டமன்துறை எனும் இடத்தில் முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதியில் ஆற்றுக்குள் கிடந்த மூட்டையை போலீசார் கைப்பற்றினர். அதற்குள் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு ஆண் உடல் மட்டும் இருந்தது. அதை கைப்பற்றி, இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஒரு பெண்ணும், இளைஞனும் பைகளில் எதையோ கொண்டு வந்து கொட்டியது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் சிசிடிவி கேமரா உதவியுடன் அந்த பெண் இறந்த விக்னேஸ்வரனின் தாய் செல்வி என்றும், உடன் வந்த இளைஞர் அவரின் தம்பி விஜய் பிரசாத் எனவும் தெரிய வந்தது.
Advertisment
Advertisements
மகனை கொலை செய்த செல்வியின் கணவர் ராஜா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பிறகு செல்வி தனது இரண்டு மகன்களான விக்னேஸ்வரன் விஜய் பிரசாத் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். விக்னேஸ்வரன் என்ஜினீயரிங் பட்டதாரி. மேலும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையானதால் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு தனது சொந்த தேவைக்கும் பழக்கத்துக்கும் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது மட்டுமின்றி தவறான நண்பர்களுடன் பழக்க வழக்கமும் இருந்தது இதனால் தினமும் வீட்டில் தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஸ்வரனின் தம்பி விஜய பிரசாத் காதல் திருமணம் செய்துள்ளார். தனக்கு திருமணமாகாத நிலையில் தனது தம்பி திருமணம் செய்து கொண்டதால் தன்னை அவமதித்து விட்டதாக விக்னேஸ்வரன் நினைத்தார். இதனால் தம்பியிடமும் தாயிடமும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் விக்னேஸ்வரனுக்கு பெண் பார்த்த போது, அவருக்கு போதை பழக்கம் இருப்பது தெரிந்து, யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லையாம். இப்படி தொடர்ந்து தங்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்த மூத்த மகனை தீர்த்துக் கட்ட தயாரான செல்வி, இளையமகனை கோவையில் இருந்து கம்பத்திற்கு வர சொன்னதை போலீஸார் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதன்படி காஃபியில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, பிறகு வாய், மூக்கை அடைத்து கொன்றதாக தெரிவித்துள்ளார் செல்வி. இதனைத் தொடர்ந்து செல்வியும், விஜய் பிரசாத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.