Advertisment

பஞ்சமி நிலம் பிரச்சனை: விசாரணை மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

முரசொலி வழக்கறிஞர் எழுப்பிய கேள்விகளுக்கு தேசிய எஸ்சி ஆணையத்தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6 தேதிக்கு உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளி வைத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
murasoli, land dispute, DMK , Chennai high Court , National SC ST Commission

murasoli, land dispute, DMK , Chennai high Court , National SC ST Commission

முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பது குறித்த புகார் தொடர்பான வழக்கில் தேசிய எஸ்சி ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Advertisment

முரசொலி அறக்கட்டளை இயங்கி வரும் இடம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய எஸ்சி ஆணையத்தில் புகார் அளித்தார். அதுதொடர்பாக ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சம்மன் அனுப்பபட்டது. அதை எதிர்த்தும், இது தொடர்பான ஆணைய விசாரணைக்கு தடை கோரியும் உயர் நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், முரசொலி அறக்கட்டளை உள்ள இடம் முறையாக விற்பனைப் பத்திரம் மூலம் வாங்கப்பட்டது என்றும், இந்த நிலம் கடந்த 83 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளை வசம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பஞ்சமி நிலச் சட்டம் 1892 : நூற்றாண்டுகளாக தொடரும் நிலத்திற்கான உரிமை போராட்டம்

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி சி.விகார்த்திகேயன், முரசொலி அறக்கட்டளை உள்ள நிலத்தின் ஆவணங்களை ஆணைய விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும், இதுதொடர்பாக ஆணையத்துணைத் தலைவரான முருகன் விசாரிக்கக்கூடாது என்றும், ஆணையத்தலைவர் மற்றும் துணைத்தலைவர்பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத் துணைத்தலைவரான முருகன் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யபப்ட்டது. அதில், இது பஞ்சமி நிலம் அல்ல என்பதை முரசொலி அறக்கட்டளை முதலில் நிரூபிக்கவேண்டும்.  இதுதொடர்பான புகாரை விசாரிக்க எஸ்சி ஆணையத்துக்கு எல்லா அதிகாரமும் உள்ளது என்று தெரிவ்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் நீதிமன்றம் போல எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த நிலம் பஞ்சமி நிலமா இல்லையா என்பது குறித்து மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எனவே, விசாரணை மேற்கொள்ளக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முரசொலி அறக்கட்டளை உள்ள இடத்துக்கான ஆவணங்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்ப்டடுள்ளது. எஸ்சி  ஆணையத் துணைத் தலைவரான முருகன் இதற்கு முன்பாக பாஜகவில் தேசிய செயலாளராக பதவி வகித்துள்ளார். கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முரசொலி நிலம் பஞ்சமி நிலம் எனக்கூறி விசாரணை மேற்கொண்டார். அதுபோல இதுதொடர்பாக புகார் அளித்த பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசனும் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சார்ந்தவர் அல்ல’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், இந்த வழக்கில் தேசிய எஸ்சி ஆணையத்தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6 தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Tamilnadu Dmk Murasoli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment