Murasoli land dispute issue SC commission summons MK Stalin : திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சுமத்தினார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் அசுரன். பஞ்சமி நிலம் குறித்து பேசும் படத்தினை திரையரங்கில் பார்த்துவிட்டு திரும்பிய முக ஸ்டாலின் அந்த படம் குறித்த பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினார்.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
பாமகவினர் மற்றும் சில முக்கிய கட்சியினர் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டது என்று புகாரை முன்வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தேசிய பட்டியல் இன ஆணையம் வரைக்கும் சென்றது. பாரதிய ஜனதா கட்சியை பிரமுகர் சீனிவாசன் பட்டியல் இன ஆணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 21ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அக்டோபர் 22ம் தேதி உரிய ஆவணங்களுடன் ஏழு நாட்களில் ஆஜராக வேண்டும் என்று பொதுச்செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சச்சினுக்கு அறிவுரை வழங்கிய ஹோட்டல் ஊழியர்
பிறகு நவம்பர் 19ம் தேதி சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையத்தில் தலைமை செயலாளர் சண்முகம், முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ஆஜராக கூறி ஆணையம் உத்தரவிட்டது. ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகன் முன்பு தலைமைச் செயலாளர் சண்முகம், உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக முரசொலி நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ். பாரதி மற்றும் திமுக வழக்கறிஞர்கள் ஆகியோர் ஆஜரானார்கள்.
தகுந்த ஆதாரங்களுடன் அவர்கள் ஆஜராக, பாஜக உறுப்பினரோ சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கூறினார். அதனால் இந்த விவகாரம் குறித்து ஜனவரி மாதம் விசாரிக்க முடிவெடுத்தார் துணை ஆணையர். வருகின்ற ஜனவரி 7ம் தேதி முக ஸ்டாலின் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் விடுத்துள்ளது.
மேலும் படிக்க : பஞ்சமி நிலச் சட்டம் 1892 : நூற்றாண்டுகளாக தொடரும் நிலத்திற்கான உரிமை போராட்டம்
இவர்களின் புகார்களைத் தொடர்ந்து முக ஸ்டாலின் முரசொலி அலுவலகத்தின் 1985ம் ஆண்டுக்கான பத்திரங்களை வெளியிட்டார். ஆனால் பாஜகவின் தடா பெரியசாமியோ 1923ம் ஆண்டுக்கு முன்பான பட்டாக்களை வெளியிட்டால் மட்டுமே அது பஞ்சமி நிலத்தில் அமைந்திருக்கிறதா இல்லையா என்பதை கூற இயலும் என்று கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.