தாய்மை, கருணை நரிக்கும் உண்டு; தாயை இழந்த கோலா கரடிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் வைரலாகி பரவி வருகிறது....

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது.

மனிதர்கள் மனிதத் தன்மையை மறந்து, பலரும் சாதி, மதம், வெறுப்பு, வன்முறை என்று மோசமான போக்கில் போய்கொண்டிருக்கும் நிலையில் விலங்குகள் கருணையைப் பற்றி மனித இனத்துக்கு பாடம் புகட்டும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்ட காட்டுத் தீயில், 50 மில்லியன் விலங்குகள் இறந்தன. கொடூரமான தீயில் காட்டில் இருந்த செடிகொடிகள், மரங்கள், என அனைத்து கருகி சாம்பாலானது. இந்த காட்டுத் தீயில் பல பெரிய விலங்குகள் உயிரிழந்ததால் அதன் குட்டிகள் ஆதரவற்று தவித்து வருகின்றன.

பொதுவாக நரிகளைப் பற்றி பலரும் சிறு வயதில் கதைகள் கேட்டிருப்போம். நரிகள் தந்திரமானவைகள். வஞ்சகம் நிறைந்தவைகள் என்று கதைகள் கேட்டிருப்போம். சிறு வயதில் கேட்கிற எதுவொன்றையும் அப்படியே நம்பிவிடுவோம். நரிகளைப் பற்றிய அந்த எண்ணம் மிகவும் தவறானவை என்று கூறும்படி ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.


ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் வைரலாகி பரவி வருகிறது. காட்டு தீயில் தனது தாயை இழந்த குட்டிகளுக்கு வேற்றுமை பாராமல் பாலூட்டிய நரியின் செயலை டுவிட்டர் பயனாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

Web Title:

Fox feeds to koala bears kids in australia viral video

Related Posts
ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள்
ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள்

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தரவரிசை பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்க பட்ட நிலையில், அது குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்திருந்த ஸ்டாலினின் பேட்டி முரசொலி நாளிதழில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி வெளியானது. அதே போல, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 […]

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருந்து தந்தவர்களை அடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் ஆவேசம்
தமிழக அரசுக்கு நல்லாட்சி விருந்து தந்தவர்களை அடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதிரான அதிமுகவின் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close