scorecardresearch

பஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்

”பல நண்பர்களையும் குடும்பத்தினரையும் அவர்களின் பஜ்ஜிக்காக அழைத்துச் சென்றிருக்கிறேன்!”

Mylapore Jannal Bajji Kadai ramesh passed away
Mylapore Jannal Bajji Kadai ramesh passed away

மைலாப்பூரை சுற்றி நிறைய பிரபலமான சிறு உணவகங்களும், திண்பண்ட கடைகளும் உள்ளன. அங்கு பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை (ஜன்னல் கடை) நடத்தி வந்த சிவராமகிருஷ்ணன் (வயது 53), கோவிட் -19 தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானதாக, சென்னை பெருநகர மாநகராட்சி  அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

செலிபிரிட்டிகளே கொண்டாடும் செலிபிரிட்டி – ‘நம்ம தல’ தோனி தான்

உள்ளூர்வாசிகளால் ரமேஷ் என்று அழைக்கப்படும் சிவராமகிருஷ்ணன் ஜூலை 4-ம் தேதி இரவு அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு அவர் இறந்தார், என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

“சென்னையில் இருக்கும் நடைமுறையைப் போலவே, ரமேஷுக்கு கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவு நேர்மறையாக வந்தது” என்று அதிகாரி கூறினார். இதையடுத்து அவரது உடல் மைலபூரில் தகனம் செய்யப்பட்டது. மக்கள் ஜன்னல் வழியாக பஜ்ஜி வாங்க வேண்டியிருந்ததால், அந்தக் கடைக்கு ஜன்னல் பஜ்ஜி கடை என்றே பெயர் உருவானது.

ரமேஷின் மறைவு பல ஃபுட்டீக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் சென்னையிலிருக்கும் உணவுப்பிரியர்கள் அத்தனைப் பேருக்கும் பரிச்சயமானவர் ரமேஷ். ஃபுட்டீக்கள் இணைந்து சென்ற ‘ஃபுட் வாக்கை’ ஒவ்வொருவரும் தங்களது சமூக வலைதளங்களில் நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.

”மைலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் திரு ரமேஷ் நேற்று காலமானார். இதைப் பற்றி இப்போது தான் தெரிந்தது.
மெட்ராஸில் எனது முதல் உணவு நடை, இந்த மகிழ்ச்சியின் சாளரத்துடன் தான் தொடங்கியது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிக்கு சேவை செய்தீர்கள். அனைத்து நினைவுகளுக்கும் நன்றி ரமேஷ் அண்ணா” என மாதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.

 


”27 ஆண்டுகளுக்கும் மேலாக மைலாப்பூரில் வசித்து வருவதால், சிறுவயதில் இருந்தே பஜ்ஜி மற்றும் போண்டா கடையைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்த நினைவுகள் இருக்கின்றன. இந்த கனிவான மனிதனை மைலாப்பூர் இழந்துவிட்டது. அவரது ஆன்மா அமைதியுடன் இருக்கட்டும்!” என ஸ்ரீராம் என்பவர் பதிவி செய்திருக்கிறார்.

மின்சார சட்ட விதிகளின்படியே, மின்கட்டணம் கணக்கீடு : தமிழக அரசு திட்டவட்டம்

இன்னும் சிலரின் நினைவுகளை இங்கே பதிவிடுகிறோம்

”மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியூட்டும் செய்தியாகவும் உள்ளது. சிறந்த பஜ்ஜி மற்றும் சட்னி அவரிடம் எப்போதும் இருக்கும். மைலாப்பூர் அதன் அழகுகளில் ஒன்றை இழந்தது. அமைதியாக இருங்கள் ஐயா.”

”நிச்சயமாக எனக்கு தனிப்பட்ட இழப்பு போல் இருக்கிறது. நான் அவர்களின் பொங்கல் / காரா சட்னி, பஜ்ஜி, போண்டா, கிச்சடிக்கு மிகப்பெரிய ஃபேன்.
ஓம் சாந்தி, அவரது ஆன்மா நிம்மதியாக இருக்கட்டும்”

”இதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிற்றுண்டிக்கு எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று, பல நண்பர்களையும் குடும்பத்தினரையும் அவர்களின் பஜ்ஜிக்காக அழைத்துச் சென்றிருக்கிறேன்!”

”கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர். பல பேச்சிலர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவளித்து வந்தார். கடைக்கு முன்னால் நிற்கும் ஏழைகளுக்கு ஒரு தட்டு சூடான பஜ்ஜிகளைக் கொடுப்பார். என் குழந்தைகள் அவரது பஜ்ஜி மற்றும் சட்னியை மிகவும் விரும்புகிறார்கள்.”

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mylapore jannal bajji kadai ramesh passed away due to coronavirus