Nagapattinam News : நாகை மாவட்டம் வண்டல் கிராமத்தில் இடைநிலை சாதியை சேர்ந்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை அன்று 17 வயது தலித் இளைஞர் ஒருவரை வன்னிய சாதி தலைவர் காடு வெட்டி குருவின் பேனர் முன்பு வணங்குமாறு அவர்கள் கட்டாயப்படுத்தியதன் காரணாமக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றுக்கு பரிகாரம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
காடுவெட்டி குரு பற்றி அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, அந்த இளைஞரை சில இடைநிலை சாதியினர் அழைத்து அறிவுரை கூறியதோடு தலைஞாயிறு காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்ட பேனர் முன்பு வணங்குமாறு வறுபுறுத்தப்பட்டுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, தலித் இளைஞர்கள் பலர் காவல் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
“சாதிய பாகுபாடுகளுக்கு ஆளானேன்” – ராஜினாமா செய்த ஐ.ஐ.டி. மெட்ராஸ் பேராசிரியர்
அந்த கிராமத்தில் தற்போது காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மேற்கொண்டு பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.ஜவஹர். அந்த எட்டு நபர்கள் மீதும் ஐ.பி.சி. 147 (கலவரம்), 294 (பி), 352, இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 பகுதி -1 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil