வைகோவை சந்தித்து நன்றி கூறிய நக்கீரன் கோபால் : 'நக்கீரன்' வார இதழில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஒரு கட்டுரைக்காக, நேற்று(அக்.9) அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி, அதற்கு முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சில முறை சந்தித்ததாக அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.
இதனால், ஆளுநரை தனது பணியை செய்ய விடாமல் தடுப்பதாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து IPC 124 பிரிவின் படி கைது செய்யப்பட்ட ஆசிரியர் கோபாலை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் அனுமதி கோரினர்.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு இப்போது எதற்கு வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்?
ஆளுநர் பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காக 124 பிரிவில் கைது செய்யப்படிருப்பதில் எந்த முகாந்திரமும் இல்லை.
எனவே, அவரை காவலில் விசாரிக்க அனுமதிக்க முடியாது' என்றார். இதையடுத்து, நேற்று மாலை நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையில் ஆசிரியர் கோபால் கைதானவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரடியாக வந்து அவரை சந்திக்க அனுமதி கேட்டார்.
'வக்கீல் என்ற முறையில் அனுமதியுங்கள்' என்று கேட்டும் வைகோவை போலீசார் அனுமதிக்கவில்லை.
உடனே, வைகோ அங்கேயே தர்ணா போராட்டம் நடத்த, வைகோவையும் போலீசார் கைது செய்து மாலை ரிலீஸ் செய்தனர். பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆசிரியர் கோபாலை சந்தித்தார்.
நன்றி தெரிவித்த நக்கீரன் கோபால்
இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்தார்.
கழகத் தலைவர் அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த ‘நக்கீரன்’ ஆசிரியர் திரு. கோபால் அவர்கள், தான் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கருத்துரிமைக்கு ஆதரவளித்த கழக தலைவருக்கு நன்றி தெரிவித்தார். pic.twitter.com/UJI44mv056
— #DMK4TN (@DMK4TN) October 10, 2018
அதேபோல், எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தில் வைகோவை சந்தித்து ஆசிரியர் கோபால நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், 'நக்கீரன் பத்திரிக்கையை முடக்க நினைக்கிறார்கள்' என்று குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க - நக்கீரன் கைது விவகாரம்: ஆளுநர் மாளிகை அம்பு முறிந்தது எப்படி?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.