முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஒரு லட்சம் மக்களுக்கு தண்டையார்பேட்டை, ராயபுரத்தை விட மணலியில் தொற்று அதிகம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், நளினி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நளினிக்கும் சிறையில் உள்ள சில கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சில மன வேறுபாடுகள், சண்டையாக மாறியுள்ளது. இந்த சண்டை காரணமாக நளினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நளினி, தன்னிடம் இருந்த ஒரு துணியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
ஆம்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அஸ்லம் பாஷா காலமானார்
அந்த சமயத்தில் காவலர் ஒருவர் பார்த்து நளினியை காப்பாற்றியிருக்கிறார். திடமான பெண்ணான நளினி தற்கொலைக்கு முயன்றது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”