நாமக்கல் திமுக.வினர் சிறையில் அடைப்பு: ஆளுனரை கண்டித்து மு.க.ஸ்டாலின் போராட்டம்-கைது

நாமக்கல் திமுக.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக.வினர் போராட்டத்தில் குதித்தனர்.

நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (ஜூன் 22) வருகை தந்தார். மாநில சுயாட்சிக் கொள்கைக்கு விரோதமாக ஆளுனர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்வதை ஆரம்பம் முதல் திமுக எதிர்த்து வருகிறது.

நாமக்கல் திமுக.வினர் சிறையில் அடைப்பு: மு.க.ஸ்டாலின் போராட்டம், பேட்டி

நாமக்கல் மாவட்டத்திற்கு நேற்று ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வந்தபோதும் வழக்கம்போல முன்னாள் மத்திய அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான காந்தி செல்வன் தலைமையில் திமுக.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

Namakkal District, DMK Protest against TN Governor, Banwarilal Purohit, MK Stalin Protest

நாமக்கல் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய இடத்தை ஆளுனர் கார் கடந்து சென்றபோது…

வழக்கமாக கருப்புக் கொடி போராட்டம் நடத்தும் திமுக.வினரை கைது செய்து மாலையில் விடுவித்துவிடுவார்கள். ஆனால் நாமக்கல் திமுக.வினர் போராட்டம் செய்த பகுதியில் ஆளுனர் சென்றபோது கருப்புக் கொடிகளை ஆளுனரின் காரை நோக்கி வீசியதாக கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், Namakkal District, DMK Protest against TN Governor, Banwarilal Purohit

நாமக்கல் தி.மு.க போராட்டத்தில் கலந்துகொண்ட மகளிர் அணியினர்

இதைத் தொடர்ந்து காந்தி செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுக.வினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

நாமக்கல் திமுக.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக.வினர் போராட்டத்தில் குதிக்கிறார்கள். சென்னையில் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்தினார். இதன் LIVE UPDATES

5:00 PM : ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்று கைதான மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

2:00 PM: பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், ‘மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் ஆளுநர் செயல்படுவதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆளுநர் ஆய்வில் ஈடுபடுவது ஸ்டாலினுக்கு எந்த வகையில் இடையூறாக உள்ளது? நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை ’ என்றார் அவர்.

1:30 PM: கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு கட்சி  பிரமுகர்கள் திரண்டிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின், MK Stalin, MK Stalin Arrested, MK Stalin Charges TN Governor

நாமக்கல் சிறை அடைப்பைக் கண்டித்து போராடிய மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கைதுக்கு பிறகு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில்…

12:30 PM: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘நாமக்கல் திமுகவினரைப் போல ஸ்டாலினையும் ரிமாண்ட் செய்ய வேண்டும்’ என கருத்து தெரிவித்தார்.

11:30 AM: ஆளுனர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டனர். அனைவரும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீஸார் கூறினர்.

நாமக்கல் மாவட்டம், Namakkal District, DMK Protest against TN Governor, Banwarilal Purohit, MK Stalin

நாமக்கல் திமுக.வினர் கைதை கண்டித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுனர் மாளிகை நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டம்

11:00 AM: நாமக்கல்லில் திமுக.வினர் மொத்தம் 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டித்து ஸ்டாலின் முகநூல் பதிவும் வெளியிட்டிருக்கிறார்.

Namakkal District, DMK Protest against TN Governor, Banwarilal Purohit, MK Stalin

நாமக்கல் திமுக.வினர் மொத்தம் 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

10:55 AM: சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக செல்ல முயன்ற திமுக.வினர் கைது செய்யப்பட்டனர். அப்போது, ‘மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது’ என மு.க.ஸ்டாலின் கூறினார்.

10:45 AM : போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சேலம் 8வழி சாலை திட்டப்பணிகளை மக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் நிறைவேற்ற வேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணிகளை ஆளுநர் செய்வது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த திடீர் போராட்டம் நடைபெறுகிறது’ என்றார்.

10:30 AM : நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுகவினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close