Nanguneri Vikravandi by-elections dmk admk election campaigns roundup : நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வருகின்ற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் திமுக, அதிமுக, மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக போட்டியிடாது என்று அறிவித்துவிட்டனர். சில தினங்களாக திமுக தலைவர் முக ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நாங்குநேரி தொகுதி
வேட்பாளர் : ரூபி மனோகரன்
கூட்டணி கட்சி : காங்கிரஸ்
அக்டோபொஅர் மாதம் 8ம் தேதி முதல் நாங்குநேரி தொகுதியில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் முக ஸ்டாலின். திண்ணைப்பிரச்சாரம் முதல் கூட்டம் வரை அமைத்து மக்களின் குறைகளை கேட்பதும், வெற்றி பெற்றால் மக்களுக்கு நிகழ இருக்கும் நன்மைகள் குறித்தும் அவர் உரையாடி வருகிறார். 9ம் தேதி நொச்சிக்குளத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார் முக ஸ்டாலின். “அப்போது நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்காதவர்களின் ஆட்சி கடந்த 8 வருடங்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
”நீங்கள் திமுகவுக்கும் கலைஞருக்கும் காங்கிரஸுக்கும் என்றும் ஆதரவாக இருந்து வருகிறீர்கள். நீங்கள் ஏன் எங்களிடம் வந்து வாக்கு சேகரிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதால் நான் உங்களிடம் வந்து வாக்குகள் சேகரிக்கின்றேன்” என்றும் அவர் அன்று பேசினார்.
அன்றைய திண்ணைப்பிரச்சாரம் முடிவுற்ற பிறகு கிருஷ்ணாபுரம் பகுதியில் குடியிருக்கும் மக்களின் குறைகளை கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அதே நாளில் சிவந்திப்பட்டி பகுதியிலும் வாக்குகள் சேகரித்தார். மக்கள் தங்களின் குறைகளைப் பட்டியலிட்டு உங்களின் பிரதிநிதி ரூபி மனோகரனிடம் கொடுத்தால் நிச்சயம் அவர் அந்த பிரச்சனைகளை களைய பாடுபடுவார் என்றும் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, சடயமான்குளம் விலக்கு போன்ற பகுதியில் பிரச்சாரத்தை நேற்று நடத்தி முடித்தார் முக ஸ்டாலின். இன்று காலை (10/10/2019) அன்று முன்னீர் பள்ளம் பகுதியில் கை சின்னத்தில் நிற்கும் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திண்ணைப்பிரச்சாரத்தில் பங்கேற்றார் முக ஸ்டாலின். தற்போது தருவையில் பேசி வருகிறார்.
”இந்த ஆட்சியில் விவசாயிகள் தமிழகத்தில் போராடியது மட்டுமில்லாமல் டெல்லியில் சென்றும் விதவிதமாக போராட்டத்தினை நடத்தினார்கள். மத்தியில் இருக்கும் அரசோ அல்லது தமிழக அரசோ இதை துளியும் கவனிக்கவில்லை. மத்தியில் மோடி என்ன சொல்கிறாரோ அதை இங்கு செய்யும் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று நாங்குநேரி தொகுதியில் முக ஸ்டாலின் பேசினார்.
இன்று மாலை நான்கு மணியில் இருந்து நாங்குநேரி பேரூர், பரப்பாடி, இட்டமொழி, வடக்கு விஜயநாராயணம், முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரப்பட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார் முக ஸ்டாலின். பின்பு செவ்வாய்கிழமையன்று (15/10/2019) அன்று பொன்னார்குடி, மூன்றடைப்பு, தளபதி சமுத்திரம், மருதகுளம், ரெட்டியார்பட்டி பகுதிகளிலும், புதன்கிழமையன்று (16/10/2019) சீவலப்பேரி, பர்கிட் மாநகரம், கே.டி.சி. நகர் வடபகுதி இடங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் முக ஸ்டாலின்.
திமுகவின் பிரச்சாரம்
தொகுதி : விக்கிரவாண்டி
வேட்பாளர் : நா. புகழேந்தி
விக்கிரவாண்டி தொகுதியில் நா. புகழேந்திக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் காணை, கல்பட்டு, சிறுவாக்கூர், நத்தமேடு தொகுதியில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். நாங்குநேரியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பின்பு இங்கு ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் 12ம் தேதி மாலை 4 மணிக்கு காணையில் இருந்து பிரச்சாரத்தை துவங்குகிறார் முக ஸ்டாலின். பின்பு மாம்பழப்பட்டு, கல்பட்டு, அன்னியூர், கெடார், சூரப்பட்டு, செம்பொன், திருக்கை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் முக ஸ்டாலின். 12 மற்றும் 13 தேதிகளில் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் மீண்டும் நாங்குநேரி செல்கிறார் முக ஸ்டாலின். பின்னர் 18 மற்றும் 19 தேதிகளில் விக்கிரவாண்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பிரச்சாரம்
தொகுதி : நாங்குநேரி
வேட்பாளர் : ரெட்டியார்பட்டி நாராயணன்
கட்சி : அதிமுக
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சூறாவளி பிரச்சாரத்தை இன்னும் துவங்கவில்லை. வருகின்ற 12ம் தேதி துவங்கி 18ம் தேதி வரையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் தொடர்பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி. நாராயணனை ஆதரித்து 13ம் தேதி ரெட்டியார்பட்டி, மூலக்கரைப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, நாங்குநேரி பேரூராட்சி பகுதிகளிலும் 14ம் தேதி ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிக்குளம் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் எடப்பாடி பழனிசாமி. 17ம் தேதி கே.டி.சி. நகர், கிருஷ்ணாபுரம், முன்னீர்பள்ளம், பொன்னார்குடி, சீவலப்பேரி பகுதிகளில்
தொகுதி : விக்கிரவாண்டி
வேட்பாளர் : முத்தமிழ்ச் செல்வன்
தேர்தல் பிரச்சார நாட்கள் : 12, 16, 18
எம்.ஆர். முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து விக்கிரவாண்டி தொகுதியில் 12ம் தேதி முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி, வி.சாத்தனூர், டி. புதுப்பாளையம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் முதல்வர். பின்பு 16ம் தேதி காணை, மாம்பழப்பட்டு, அரியலூர் திருக்கை, கெடார், சூரப்பட்டு ஆகிய பகுதிகளிலும் 18ம் தேதி விராட்டிக்குப்பம், தும்பூர், முட்டத்தூர், பனமலை மற்றும் அன்னியூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.