/tamil-ie/media/media_files/uploads/2022/12/tamil-indian-express-2022-12-23T102823.591.jpg)
Nanjil Sampath
நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்.! என மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ட்வீட் செய்துள்ளார்.
இலக்கியம், அரசியல், பட்டிமன்றம் என மேடை பேச்சுக்கு புகழ்பெற்றவர் நாஞ்சில் சம்பத். பல ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தவர், தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: பிறந்த நாள் விழாக்களுக்கு மு.க அழகிரி தடை: மதுரைக்கு பை பை!
இந்நிலையில், ஜனவரி 25 அதிகாலையில் நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து .மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் சம்பத்தின் மகன், டாக்டர். பரத் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். நாஞ்சில் சம்பத்க்கு மருத்துவர்களின் கண் காணிப்பில் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நன்றாக குணமடைந்து வரும் நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதிதாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்.!” எனப் பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதியாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்.! @CMOTamilnadu@mkstalin@news7tamil@dinamalarweb@ThanthiTV@PTTVOnlineNews@News18TamilNadu
— Nanjil Sampath (@NanjilPSampath) January 29, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.