Narendra Modi Visits Madurai Live Updates : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டுவிழாவிற்காக தமிழகம் வருகை புரிகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மோடியின் வருகை மற்றும் இதர சிறப்பு நிகழ்வுகள் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள்.
2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தை தமிழகத்தில் துவங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. அந்த நிகழ்ச்சியில் தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பேசி வருகிறார்.
Narendra Modi Visits Madurai Live Updates
01: 15 PM : 10% இட ஒதுக்கீடு பற்றி பேசிய மோடி
நம்முடைய சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற பொது நோக்கில் தான் 10% இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் பட்டியல் இனத்தவருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மோடி கூறியுள்ளார்.
01:00 PM : தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள்
ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் நோய் தடுப்பு முறைகளை ஏற்படுத்தி வருகிறது இந்த அரசு. எங்களின் அரசில் 9 கோடி கழிவறைகள் இந்தியாவில் கட்டப்பட்டுள்ளது. அதில் 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார் மோடி.
35,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே சேவைகளை விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.
பாம்பன் - தனுஷ்கோடி இணைப்பு சேவைகள் குறித்தும், சென்னையில் இருந்து மதுரையை இணைக்க இருக்கும் அதிவேக ரயிலான தேஜஸ் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்பு தொழில் வளாகத்தின் மூலமாக நிறைய புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
12: 45 PM : தமிழில் உரையை துவங்கிய மோடி
தமிழக சகோதர சகோதரிகள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம் என்று ஆரம்பித்த மோடி தமிழ்ச் சங்கத்தின் பெருமைப் பற்றியும், மீனாட்சி அம்மன் கோவிலின் பாரம்பரியம் பற்றியும் பேசிய மோடி, மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு அஞ்சலி கூறினார்.
12:30 PM : துவங்கியது தேர்தல் பிரச்சாரம்
2019ம் ஆண்டில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை தமிழகத்தில் துவங்கியுள்ளது பாஜக. அந்த நிகழ்வில் மோடி கலந்து கொண்டுள்ளார்.
12:20 PM : மோடியின் உரை
மோடியின் அரசு, மக்களின் சுகாதாரத்தினை காப்பதில் அதிகப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றுவரும் தமிழர்கள் குறித்தும், காச நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கையும், அதில் தமிழகத்தின் பங்கு குறித்தும் மோடி தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
தன்னுடைய உரையை துவங்கும் போது மதுரை வந்த அனைவருக்கும் என் வணக்கம் என தமிழில் உரையாடினார் மோடி...
12: 10 PM : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் நிகழ்த்தினார். மேலும் மதுரை - பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தஞ்சாவூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவுகளையும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்தார்.
12:00 PM : முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர்கள் உரை
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் தற்போது தங்களின் உரையை நிகழ்த்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் எப்படி மருத்துவமத்துறையில் முன்னோடியாக திகழ்கிறது என்பதை விளக்கி தன்னுடைய உரையை நிகழ்த்தி வருகின்றார்.
11:30 AM : மதுரை வந்தடைந்தார் மோடி
டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட நரேந்திர மோடி, தற்போது மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இன்னும் சற்று நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
11: 10 AM : முதல்வர் பங்கேற்பு
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதால் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது தமிழக காவல் துறை.
11:05 AM : வைகோ போராட்டம்
#MDMK protest against @narendramodi in Madurai with black balloons led by #Vaiko.. pic.twitter.com/AMxRtZvMOW
— Pramod Madhav (@madhavpramod1) 27 January 2019
11:00 AM : கேரள பொதுக்கூட்டத்தில் மோடி
தமிழக மக்களிடம் பேசிவிட்டு கொச்சி செல்லும் மோடி, திருச்சூர் மாட்டத்தில் இருக்கும் தெக்கிநாடு மைதானத்தில் பொதுமக்களிடம் கலந்துரையாடுகிறார்.
Schedule of PM Shri @narendramodi’s public programs in Tamil Nadu and Kerala on 27 January 2019. Watch LIVE on social media platforms of @BJP4India. pic.twitter.com/7r3ocEP0U6
— BJP (@BJP4India) 26 January 2019
10:30 AM : மீண்டும் மோடி... வேண்டும் மோடி - தமிழசை சவுந்தரராஜன் வரவேற்பு
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்திருக்கும் மோடிக்கு வரவேற்பு தரும் விதத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.
ஏழை,எளிய மக்களுக்கான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும் ,பாஜக மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் வரும் நம் @PMOIndia @narendramodi அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.#மீண்டும்மோடி...வேண்டும்மோடி...#TNWelcomesModi #MaduraiThanksModi @BJP4India @BJP4TamilNadu pic.twitter.com/evGabkKMnz
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 27 January 2019
10:15 AM : மோடியின் வருகைக்கு எதிர்ப்பு
மோடியின் தமிழக வருகையை எதிர்த்து, மதிமுகவினர், கையில் கருப்புக் கொடியுடன் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நின்றிருக்கின்றார்கள். இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
10:00 AM : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பம்சங்கள்
மதுரை தோப்பூரில் அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை. தோப்பூரில் சுமார் 262.62 ஏக்கர் பரப்பளவில், 1264 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது இந்த மருத்துவமனை. இதில் 15 முதல் 20 அதிநவீன சிகிச்சைப் பிரிவுகளும், அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அமைய உள்ளது.
750 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாள் ஒன்றிற்கு 1500 நபர்களுக்கு வெளி நோயாளிப் பிரிவில் சிகிச்சை அளிக்கவும், மாதம் ஒன்றிற்கு 1000 நபர்களுக்கு உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கவும் தேவையான வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
09:30 AM : ட்விட்டரில் ட்ரெண்டான மோடி
தமிழகத்திற்கு வரும் பாஜக தலைவர்களை வரவேற்பதும் எதிர்ப்பதும் என ஒவ்வொரு முறையும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது வழக்கம். நேற்றும் அப்படியே, மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Go Back Modi- ஹேஷ்டேக்கும், Madurai thanks Modi - என்று மோடியின் வருக்கைக்கு ஆதரவான ஹேஷ் டேக்கும் ட்ரெண்டாகி வந்தது.
மேலும் படிக்க : ட்விட்டரில் ட்ரெண்டான MaduraithanksModi
09:00 AM : நிகழ்ச்சி நிரல்
இன்று காலை 8 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய மோடி, மதுரை விமான நிலையத்திற்கு சரியாக 11:15 மணிக்கு வருகை புரிவார். பின்பு அங்கிருந்து சாலை வழியாக, ரிங் சாலையில் அமைந்திருக்கும் மண்டோலா நகர் மைதானத்திற்கு வருகிறார்.
11:30 மணியில் இருந்து 12:00 மணிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது. அதன் பின்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
அடிக்கல் நாட்டு விழா முடிவுற்ற பின்பு, 12:05 மணியில் இருந்து 12:55 மணி வரை பொதுக்கூட்டத்தில் உரையாடுகிறார்.
பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்பு அங்கிருந்து நேராக மதுரை விமான நிலையத்திற்கு 01:05 மணிக்கு செல்கிறார்.
அதன் பின்னர் 01:10க்கு மதுரையில் இருந்து விமான மூலமாக கேரள மாநிலம் கொச்சிக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.