Narendra Modi Visits Tamil Nadu : பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். சென்னையில் உள்ள வண்டலூரில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அவர் இன்று நாட்டு மக்களுக்காக அர்பணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் என்பதால், அனைத்து ஏற்பாடுகளையும் நேரில் சென்று கவனித்து வந்தனர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னை வண்டலூரில் நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும் பாரதப்பிரதமர் திரு.@narendramodi அவர்களை வருக வருகஎன வரவேற்கிறோம்.சாதனை நாயகனை வரவேற்க அனைவரும் வாரீர் அலைகடலென திரண்டு வாரீர்.#மீண்டும்மோடிவேண்டும்மோடி #NaMoAgain2019 #TNWelcomesModi @PMOIndia @BJP4India pic.twitter.com/Y873ZF3j4g
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 5 March 2019
மேலும் படிக்க : திமுக தொகுதிப் பங்கீடு ஒரு பார்வை
Narendra Modi Visits Tamil Nadu
பாஜக தலைவர்கள் முரளிதர ராவ் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டனர். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கிறார்.
காஞ்சிபுரத்தில் 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் பணியினையும் மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய இருக்கும் பாஜக, பாமக, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சியின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். தேமுதிக இந்த கூட்டணியில் இன்று இணையலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
பகல் 12 மணிக்கு கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறார் மோடி. மாலை சரியாக 04:15 மணிக்கு காஞ்சிபுரம் வருகை புரிகிறார் மோடி.
திமுக பிரச்சாரம்
இந்நிலையில் இன்று, விருதுநகர் மாவட்டத்தில் திமுக தென் மண்டல மாநாட்டினை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தற்போது விருதுநகர் சென்றுள்ளார் முக ஸ்டாலின்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.