/tamil-ie/media/media_files/uploads/2021/04/Neet.jpg)
Neet exam 2021 Vellore student commits suicide : அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, ஜெயலட்சுமி தம்பதியினரின் இரண்டாவது மகள் கனிமொழி நீட் தேர்வு தோல்வி அச்சம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி சற்று தணிவதற்கு முன்பு மற்றொரு தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு தோல்வி பயம்: அரியலூர் மாணவி தற்கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ளது தலையாரம்பட்டு என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாணவி சௌந்தர்யா. அவர் 12ம் தேதி அன்று நீட் தேர்வு எழுதிய நிலையில் அதில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சம் காரணமாக வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு 12ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அந்த தேர்வுகளில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. இது போன்ற சமயங்களில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதுடன் தோல்வி குறித்த நேர்மறையான கருத்துகளையும், தோல்வி என்பது நாம் முயற்சிக்கின்றோம் என்பதன் அறிகுறிகள் தான் என்ற எண்ணத்தையும் வளர்க்கும் விதமாக நடந்து கொள்வது நல்லது. தோல்வி அடைந்தாலும் கூட அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து மாற்று பாதையை தேர்வு செய்ய அவர்களுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டும்.
எந்த விதமான பிரச்சனைகளுக்கும் தற்கொலை என்பது ஒரு முடிவல்ல. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற தயக்கம் காட்டாதீர்கள். இலவச ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும் சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் ; அலைபேசி எண் +91 44 2464 0050, +91 44 2464 0060
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.