Advertisment

ஹாய் கைய்ஸ் : இந்திய இதிகாசங்களை ஏற்க மறுக்கும் மக்கள் - ஜெயமோகன் குற்றச்சாட்டு

விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், என் கிராம வளர்ச்சிக்கு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறேன். என் மனைவியையும், சேவையில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும் என, நினைத்தேன்

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nellai, sub collector, sivaguru prabhakaran, dowry, free medical service, marriage, adulteration, doctors, advice, writer jeyamohan, mahabharat, ramayan, uttarpradesh, invitation

nellai, sub collector, sivaguru prabhakaran, dowry, free medical service, marriage, adulteration, doctors, advice, writer jeyamohan, mahabharat, ramayan, uttarpradesh, invitation

ஹாய் பிரெண்ட்ஸ், வீக் என்டை நல்லா என்ஜாய் பண்ணீங்களா, வாங்க அதே உற்சாகத்தோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

நம் மரபுக்கு சொந்தமான மாபெரும் இதிகாசம் மகாபாரதம். மனித வாழ்வின் அனைத்து சாரங்களும் இதில் அடங்கி இருக்கின்றன. வேறு எந்த நாட்டவருக்கும் இப்படி ஒரு காவியம் இல்லை. காலந்தோறும் கதைகளால் மகாபாரதம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய, கிரேக்க பழங்கதைகளை உண்மை என, ஏற்றுக்கொள்பவர்கள், இந்திய இதிகாசங்களையும், தொல்கதைகளையும் ஏற்க மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெல்லை சப் - கலெக்டர் சிவகுரு பிரபாகரன், தன் திருமணத்திற்கு வரதட்சணையாக, 'என் மனைவி, கிராம மக்களுக்காக, இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்' எனக் கேட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. இதுகுறித்து சிவகுருபிரபாகரன் கூறியதாவது:விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், என் கிராம வளர்ச்சிக்கு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறேன். என் மனைவியையும், சேவையில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும் என, நினைத்தேன். அதனால், கிராமத்திற்கு மருத்துவம் அளிக்க, டாக்டர் படித்த பெண்ணை, திருமணம் செய்து கொண்டேன். வெளியூரில் பணியில் இருந்தாலும், கிராமத்திற்கு, இருவரின் சேவை தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வாழ்த்துக்கள் தோழரே

பச்சை பட்டாணிக்கு ரசாயன சாயமேற்றி, 'ப்ரெஷ்' ஆக மாற்றி, விற்பனை செய்யும் கொடுமை நடக்கிறது. இவற்றை உண்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் . ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு 'பச்சை பட்டாணியை' போடுங்கள். ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். சுத்தமான, நிறம் சேர்க்கப்படாத பட்டாணியாக இருந்தால், தண்ணீர் நிறம் மாறாது.ரசாயன நிறம் சேர்க்கப்பட்ட பட்டாணியாக இருந்தால், அதன் நிறம் பரவி, தண்ணீரும் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். சுத்தமான பருத்தி பஞ்சினை தண்ணீரில் நனைத்து, பட்டாணியின் மீது வைத்து தேய்த்து எடுத்தால் போதும். பஞ்சின் நிற மாற்றத்தில் இருந்து, அது சாயம் ஏற்றப்பட்டது என அறியலாம்.இவற்றை சமையலுக்கு பயன்படுத்துவதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

எங்கு போய் முடியுமோ...

ஹாய் கைய்ஸ் : காய்ந்த இலைகளுக்காக ஒரு தொட்டி - அசத்தும் சென்னை மாநகராட்சி

ஹாய் கைய்ஸ் : அதென்ன குப்பைத்தொட்டியா, திருந்துங்கள் மக்களே...

மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் உ.பி.,மாநில முஸ்லீம் ஒருவர் தன்னுடைய மகளின் திருமண பத்திரிகையில் இந்து கடவுள் படத்தை அச்சடித்துள்ளார். வகுப்பு வாத வெறுப்பு வளர்ந்து வரும் நிலையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த முயற்சி எடுத்தேன். என்னுடைய இந்த முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என முகமது சரபாத் கூறியுள்ளார்.

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Milk Adulteration Nellai Writer Jeyamohan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment