/tamil-ie/media/media_files/uploads/2022/01/coronavirus-1-2-2-1.jpg)
27 Stanley Medical College students test positive for Covid-19 : சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு தொற்று க்ளஸ்டர் உருவான நிலையில் தற்போது ஸ்டான்லின் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் 14 நபர்கள் ஆண்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள். மீதம் உள்ள 13 பேர் பெண்கள் விடுதியில் தங்கி மருத்துவம் படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு கூர்க் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒமிக்ரான்: வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் வழிகாட்டுதல்களில் இந்தியா மாற்றம் செய்தது ஏன்?
கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் இன்று இரவு முதல் புதிய ஊரடங்கு உத்தரவுகள் நடைமுறைக்கு வருகிறது.
இரவு நேர ஊரடங்கு… வழிபாட்டு தலங்களுக்கு தடை… தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.