/tamil-ie/media/media_files/uploads/2020/06/a140.jpg)
சென்னை தவிர, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் கடந்த சில வாரங்களாக கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இரு மாவட்டங்களும் தலா 1,000 க்கும் மேற்பட்ட நோய்த் தொற்றுக்களை பதிவு செய்துள்ளன. அங்கு வைரஸ் அதிகரிப்பதற்கு, அருகாமையில் இருக்கும் சென்னை முக்கிய காரணமாகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டில் மொத்தம் 1,719 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. புல்லட்டின் படி, இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கை இந்த மாவட்டத்தில் தான் அதிகமாக உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் - தமிழக அரசு நிர்ணயம்
“சென்னை காவல்துறை ஆணையரின் வரம்பில் உள்ள மண்டலம் VIII, வண்டலூர் வரை நீள்கிறது. கிட்டத்தட்ட 90% பாதிப்புகள் அங்கிருந்து வந்தவை" என்று ஒரு அதிகாரி கூறினார்.
கடந்த ஐந்து நாட்களில் பதிவான பாதிப்புகளை ஆய்வு செய்த போது, மூன்றில் இரண்டு பங்கு பாதிப்புகள் செங்கல்பட்டுவிலிருந்து சென்னைக்கு வேலைக்குச் செல்லும் நபர்களால் ஏற்பட்டதை காட்டியது. இரண்டாம் நிலை பாதிப்புகள் உள்ளூர் பகுதிகளில் இருந்து கண்டறியப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்
திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, திருவள்ளூர்-சென்னை எல்லையில் ஒரு சில இடங்கள் கவலைக்குரியவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக ஆவடி கார்ப்பரேஷன், திருவேற்காடு நகராட்சி, வில்லிவக்கம் மற்றும் பூந்தமல்லி பகுதிகளை சுட்டிக்காட்டினர். சனிக்கிழமை நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1,274 பாதிப்புகள் உள்ளன.
காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகியவை தனி மாவட்டங்களாக இருந்தாலும், அவை மாநில தலைநகருடன் “பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன”, மேலும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் வசிக்காவிட்டாலும் சென்னை மக்களாக கருதப்பட வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சேலம் ராணுவ வீரரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்
"பதிவான பல பாதிப்புகள் சென்னை புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவை, சென்னை போலல்லாமல், ஒரு தனி ஸ்டிராடஜி பின்பற்றப்பட வேண்டும், ஏனெனில் இந்த மாவட்டங்களில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள் உள்ளன," என்று அவர் கூறினார்.
இந்த மாவட்டங்களின் கிராமப்புறங்களில், COVID-19 பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்தது, இது கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு உதவியது. ஆனால் நகர்ப்புறங்களில் இது அப்படி இல்லை.
"இந்த பகுதிகளை மைக்ரோ அளவில் இன்ச் இன்ச்சாக கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. வீதி சார்ந்த மற்றும் பகுதி சார்ந்த உத்திகள் தேவை" என்று தலைமை செயலாளர் கே.ஷண்முகம் கூட்டிய அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.