சென்னையில் களைகட்டும் புத்தாண்டு.. ஹோட்டல்கள் கடைபிடிக்கும் விதிமுறைகள் என்ன?

கொண்டாட்டங்களுக்கு வரும் நபர்களிடம் இருந்து ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பெற்றுக் கொண்ட பின்னரே அனுமதி அளிக்கப்படும்.

2020 New year party celebrations at Puducherry

New year celebration party regulations for malls, resorts in Chennai : சென்னையில் இன்று இரவு துவங்கி பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு உணவகங்கள், மால்கள், மற்றும் நட்சத்திர விடுதிகள் தயாராகி வருகின்றது. அதே நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சென்னை மாநகர காவல்துறையால் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டின் துவக்கத்தை வரவேற்க மால்கள், ரெஸார்ட்கள் மற்றும் உணவகங்களில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் என்னென்ன என்பதை படித்துவிட்டு பின்பு அங்கே செல்லுங்கள். சிறப்பாக நியூ இயரை கொண்டாடுங்கள்.

2019ம் ஆண்டில் தமிழ் திரையுலகம் இழந்த முக்கிய நட்சத்திரங்கள் யார் யார்?

விதிமுறைகள்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றால் அது கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல்கள், உணவகங்கள், கடற்கரை பண்ணை வீடுகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள் தான்.

மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் விதிக்கப்பட்ட முக்கிய விதிமுறைகள்

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் சென்று கொண்டாடப்படும் கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் பகுதியில் இருக்கும் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் மாலை 6 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போதையில் தண்ணீருக்குள் மூழ்கி பலியாவதை தடுப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 31ம் தேதி இரவு அல்லது 1ம் தேதி அதிகாலை 1 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.

மது குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் காவல்துறையினரின் அனுமதி பெற்ற பின்னரே கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

கொண்டாட்டங்களுக்கு வரும் நபர்களிடம் இருந்து ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பெற்றுக் கொண்ட பின்னரே அனுமதி அளிக்கப்படும். மோட்டர் சைக்கிள் பந்தயத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Happy New Year 2020 Quotes : ஹேப்பி நியூ இயர் ஃப்ரெண்ட்ஸ்… இந்த படங்களுடன் வாழ்த்துகளை பகிருங்கள்!

இன்று இரவு நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள்

Loop Lounge and Kitchen

நட்சத்திர விடுதிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லூப் லாஞ்ச் அண்ட் கிச்சன் (Loop Lounge and Kitchen) நடத்தும் Loop NYE Bash 2020 என்ற நிகழ்வில் டி.ஜே விஷ் மற்றும் டிஜே பிக் டாடி பார்ட்டிகள் நடைபெற உள்ளாது. ஸ்கை டெக்கில் அமர்ந்து 360 டிகிரியில் நட்சத்திரங்களுக்கு கீழே அமர்ந்து நீங்கள் உங்களின் நியூ இயரை கொண்டாடலாம். அன்லிமிட்டட் உணவு மற்றும் 8 மணியில் இருந்து இரவு 12 மணி வரை டான்ஸ் ஃப்ளோரும் நடைபெற உள்ளது.

புல்லிங்கோ நைட் 2020 – வெரித்தனம் பார்ட்டி

சென்னை டி நகரில் உள்ள சபரி ஹோட்டல் குவாலிட்டி இன்னில் இந்த பார்ட்டி நடைபெற உள்ளது. மது, டான்ஸ் ஃப்ளோர், டி.ஜே, மெர்சல் நைட் என்று பலவிதமான பார்ட்டிகள் நடைபெற உள்ளது.

Grand Oceana Beach

ஈ.சி.ஆரில் அமைந்திருக்கும் கிராண்ட் ஒசானா பீச்சில் (Grand Oceana Beach) இன்று இரவு 7 மணியில் இருந்து பீச் பார்ட்டி நடைபெற உள்ளது. டி.ஜே. மற்றும் டான்ஸ் ஷோக்கள் மற்றும் அன்லிமிட்டட் உணவு மற்றும் காக்டெய்ல்கள் வழங்கப்படும். இந்த பார்ட்டிக்காக ஒருவரிடம் வாங்கப்படும் கட்டணம் ரூ. 1999-ல் இருந்து ஆரம்பமாகிறது.

சரக்கு, முறுக்கு, நறுக்குனு 2020

ரிச்ஃபாம் ஸ்டுடியோஸ் (RICHFAM Studios) இந்த டிஜே நைட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்று இரவு 7 மணிக்கு துவங்கி நாளை அதிகாலை 12.30 மணி வரை நடைபெறுகிறது இந்த ஓப்பன் டான்ஸ் ஃப்ளோர் பார்ட்டி.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New year celebration party regulations for malls resorts in chennai

Next Story
Tamil Nadu News today updates : இந்தியாவில் 2020 பிற்பகுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express