News in Tamil latest headlines live : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், சந்திப்புகள், வானிலை போன்ற அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் இந்த லிங்கில் அறிந்து கொள்ளலாம்.
News in Tamil latest headlines - இன்றைய ஹைலைட்ஸ்
- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்திப்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத தலைமை உருவாக வேண்டும் என்று தற்போது கே.சி.ஆர் முயற்சி செய்து வருகிறார். கடந்த வாரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியுடன் அலைபேசியில் ஆலோசனையும் நடத்தி வந்தார்.
மேலும் படிக்க : நல்லகண்ணுவுக்காக எழுந்த குரல்கள்: பொதுவாழ்வுக்கு கிடைத்த அங்கீகாரம்
- அன்னிய செலாவணி வழக்கில் ஆஜராகாத சசிகலா. மே 28ம் தேதி ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
- பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய பாடநூல்களின் விநியோகம் தொடங்கியது.
- சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே என்ற இந்து - கமலின் சர்ச்சை பேச்சால் அரசியல் வட்டாரங்களில் கருத்து மோதல்
Live Blog
தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் நொடிக்கு நொடி உங்கள் பார்வைக்கு
சந்திரசேகர் ராவை சந்தித்து தனது எண்ணத்தை மாற்றிவிட்டார் ஸ்டாலின்; தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் - அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை.
சென்னை ஆழ்வார்பேட்டியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு! #MKStalin #DMK #ChandrasekharaRao pic.twitter.com/dOEmvPQLuB
— IE Tamil (@IeTamil) 13 May 2019
மூன்றாம் அணியை உருவாக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தற்போது சென்னை வந்துள்ளார். சரியாக 4 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள முக ஸ்டாலின் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார் அவர்.
மே 23ம் தேதி, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான முடிவுகளும் அன்று அறிவிக்கப்படும். பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெறும். இந்நிலையில் 27ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று நேற்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் தங்களின் எதிர்ப்புகளையும் ஆதரவினையும் கமல் ஹாசனின் கருத்திற்கு கூறிவருகின்றனர். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியது சரி தான் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து.
இன்று மட்டும் நாளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
1996 - 97க்கு இடைப்பட்ட காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ஜெ.ஜெ.டிவிக்கு உபகரணங்கள் வாங்கியதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சசிகலா மற்றும் அவருடைய அக்கா மகன் பாஸ்கரன் மீது Foreign Exchange Regulation Act கீழ் புகார் பதிவு செய்யபட்டது.
இது தொடர்பாக ஏற்கனவே வீடியோ கான்ஃபிரன்ஸ் வழியாக ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அமலாக்கத்துறையினர் குறுக்கு விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேரில் ஆஜராக கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு சசிகலா மறுப்பு தெரிவிக்க வீடியோ கான்ஃபிரன்ஸ் விசாரணை நடத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்று சசிகலா ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து வரும் 28ம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அரவக்குறிச்சியில் வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் அந்த தொகுதியில் நிற்கிறார் எஸ்.மோகன்ராஜ். இன்று மாலை அக்கட்சியின் தலைவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருந்த நிலையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிய புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 3,4,5 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களைத் தவிர அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றம் செய்யப்பட்டு புதிய புத்தகங்கள் விநியோகம் செய்ய இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. 10,12 வகுப்புகளுக்கும் பாடப் புத்தகம் விற்பனை துவங்கியது. தனியார் பள்ளிகள், தங்களுக்குத் தேவையான பாட புத்தகங்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
தெலுங்கானா முதல்வர் மற்றும் திமுக தலைவர் சந்திப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி ஸ்டாலின் 25ஆண்டுகளுக்குப்பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்குப்பின் டில்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு?இங்கே திண்ணை நாடகம்!அடுத்து டில்லியில் கட்சி/அணி மாறிகளின் தெருக்கூத்து??#Namo again sure 2 adore as PM @PMOIndia https://t.co/L3Ejjbl5kR
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 13 May 2019
இன்றைய சூழலில் மூன்றாவது அணிக்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்பது அனைவருக்கும் தெரியும். 3 அணி வந்தால் தாங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என மோடியும், எடப்பாடி பழனிசாமியும் நினைக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 12 ஆண்டுகளாக வசித்து வந்த நல்லுக்கண்ணு மற்றும் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரையும் வெளியேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் துணை முதல்வர் நல்லுக்கண்ணு அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பொது ஒதுக்கீடு அடிப்படையில் உங்களுக்கு வாடகைக்கு வீடுகள் வழங்க வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும் படிக்க : ராகுல் காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு! ஆலோசனைக்கான காரணம் என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights