Tamil Nadu news today updates : தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை இங்கு காணலாம். நேற்று வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்த தங்கத்தின் விலை இன்று என்னவாகும்? என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒரே வாரத்தில் ரூ. 1400 வரை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் முடியவிருக்கும் அத்திவரதர் தரிசன திருவிழாவின் கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோலின் விலை ஐந்து பைசா குறைந்து 75.04 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வானிலை
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அவலாஞ்சியில் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines – தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய தொகுப்பை இங்கே காணலாம்.
முரசொலி வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இந்த சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
காவிரியில் தற்போது திறக்கும் தண்ணீரை 4 நாட்களுக்கு திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் 13-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களவையில் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். இதற்குஇன்று பதில் தெரிவிக்கும் விதமாக இன்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கை விட்டார். அதில், வைகோவை பச்சோந்தி என்றும் காங்கிரஸ் ஆதரவில் எம்.பி. ஆன வைகோ துரோகம் செய்வதாகவும் விமர்சித்தார்.
காங்கிரஸ் மற்றொரு மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவில் எம்.பி ஆன வைகோதான் நம்பர் ஒன் துரோகி. அமித்ஷா சொல்லிதான் வைகோ மாநிலங்களவையில் அவ்வாறு பேசியுள்ளார்’ என்றார்.
இதற்கு இன்று பதில் தெரிவித்த வைகோ, ‘திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவில்தான் நான் எம்.பி. ஆனேன். காங்கிரஸ் ஆதரவில் நான் என்றும் எம்.பி ஆனதில்லை’ என்றார். அமித்ஷா கூறிதான் மாநிலங்களவையில் நீங்கள் காங்கிரஸை விமர்சித்ததாக காங்கிரஸ் கட்சி
கூறுகிறதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற எனக்கு அவசியமில்லை’ என்றார் வைகோ.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் அளவுக்கதிகமாக கொட்டுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
முல்லை பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதையொட்டி அருகே இருக்கும் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
காஷ்மீர் பிரச்னையை சுட்டிக்காட்டி, டெல்லி- லாகூர் இடையிலான சம்ஜவுதா விரைவு ரயிலை காலவரையின்றி நிறுத்தியது பாகிஸ்தான். அந்த நாட்டு ரயில்வே அமைச்சர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். வாரம் இருமுறை இயக்கப்பட்ட ரயில் இது.
இதேபோல இந்திய சினிமாக்களை அங்கு திரையிடவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இன்று மாலை 4 மணிக்கு, நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாடுகிறார் என்று கூறிவந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மக்கள் மத்தியில் பேசுகிறார் மோடி.
கே.எஸ் அழகிரியின் கண்டன அறிக்கைக்கு பதில் சொல்லும் விதமாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேச்சு. புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் “கே.எஸ். அழகிரியின் வாதம் சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது என்றும், உண்மையான சில விசயங்கள் கசக்கத்தான் செய்யும் என்றும்” கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டதாக கடந்த 5ம் தேதி மாநிலங்களவையில் விவாதம் செய்தார் வைகோ. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்டவர்” வைகோ என்றும், ”காங்கிரஸின் கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸை விமர்சனம் செய்வது அரசியல் நாகரீகமற்றது” என்றும் கூறியுள்ளார் கே.எஸ். அழகிரி
நேற்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் மட்டும் திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று 60 ஆயிரம் கன அடி நீர் அதிகமாக திறக்கப்பட்டு வருகிறது. தற்போது விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படுகிறது.
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை அதிகரித்து வருவதால், கர்நாடக அணைகளில் நீர் நிறைந்து உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக மழை கொட்டிவருகின்ற நிலையில், குடகு, தார்வார்டு, மங்களூரு, ஹசன், பெலகாவி, மைசூர், கார்வார், உடுப்பி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
05ம் தேதி நடைபெற்ற வேலூர் தொகுதியின் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு துவங்கும். 10-11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிந்துவிடும் என தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து தொடர்பாக பாகிஸ்தான் நாடு ஒருதலை பட்சமாக முடிவுகளை மேற்கொண்டு வருகிறது என்றும், காஷ்மீர் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் உள்நாட்டு விவகாரம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாகிஸ்தானிற்கான இந்திய உயர் ஆணையர் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்ததை தொடர்ந்து தன்னுடைய கருத்தை வெளியிட்ட அமைச்சகம். இந்த விவகாரத்தில் யார் தலையிட முயன்றாலும் அவர்களின் முயற்சி வெற்றியில் முடியாது என்றும் அறிவிப்பு.
இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க : காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா… இருநாட்டுக் கொள்கைகளில் பாதிப்பு
அரசின் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அந்த ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியாளர்கள் முதலமைச்சர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் அனுப்ப வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு தரப்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, உதயக்குமார், மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பங்கேற்றனர்.
சென்னையில் அமைந்திருக்கும் தலைமை செயலகத்தில் முதல்வர் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து 16 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காலை துவங்கிய இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருச்சி, கரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அதிகாரங்களை உறுதி செய்த ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவான 370வை 5ம் தேதி ரத்து செய்து அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் அம்மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும், காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், துண்டிக்கப்பட்ட இணைய மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் எம்.எல்.சர்மா என்பவர் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத்-தில் உரை நிகழ்த்தும் மோடி இன்று சிறப்பு உரை நிகழ்த்த போகிறார் என்ற செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் 370,சுஷ்மா ஸ்வராஜ் மரணம், பாகிஸ்தானோடு பதற்றம்,சந்திராயன்-2 ஆகியவை அவரது உரையில் இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* ANNOUNCEMENT * 🗓️ 8th August, 2019🕓 4 pm ISTPrime Minister Shri @narendramodi will address the nation in a special broadcast by @AkashvaniAIRDetails 👇 pic.twitter.com/ZToCM3jX6U— ALL INDIA RADIO (@AkashvaniAIR) August 8, 2019பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறப்பு வானொலி ஒளிபரப்பின் மூலம் இன்று 4 மணி அளவில் நாட்டு மக்களோடு உரையாடபோகிறார்
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் வெள்ள நிலைமை கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாலும், முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றுவதாலும் தொடர்ந்து மோசமாகி வருகின்றன . வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் உதவி செய்து வருகிறது
அமெரிக்க fed தனது வட்டி வீதத்தை குறைத்ததினாலும் , அமெரிக்கா-சீனா பொருளாதாரங்களிடையே கடும் வர்த்தக போர் நடை பெறுவதினாலும் நேற்று தங்கத்தின் விலை வரலாற்றில் காணப்படாத அளவிற்கு 10 கிராமிற்கு 37,920-ஐ தொட்டது.
இந்தியாவின் பல மாநிலங்களில் தங்க விற்பனை முடங்கியது. குறிப்பாக அலகாபாத்தில் 70 சதவீதம் நேற்று தங்கம் விற்கப்படவில்லை
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் ,” தனக்கு முதலவரை பார்த்து பேசும் திட்டம் தற்போதைக்கு இல்லை” என்று தெரிவித்தார்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.
அத்திவரதர் வைபவம் -2019 ஐ முன்னிட்டு,காஞ்சிபுரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்துவும், அப்பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்லவும் வசதிகள் ஏற்படுத்தித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. #அத்திவரதர் #Aththivaradhar— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 7, 2019வயது முதிர்ந்தவர்களும், மாற்றுத் திறனாளிகளும் அமர்ந்து செல்ல கூடுதல்வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.தூய்மை பணிகளுக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்ப வேண்டும்.பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும். #அத்திவரதர்— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 7, 2019தமிழக அரசின் புதிய வழிமுறைகள்.
பக்தர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் நகரத்திற்கு வருவதையொட்டி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, ஆகஸ்ட் 13,14,16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு
அத்திவரதர் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் தரிசனக் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரும் 17ம் தேதியோடு முடிவடையும் தருவாயில், பக்தர்கள் பாதிக்காமல் இருக்க அரசு சமீபத்தில் பல வழிமுறைகளை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தரிசன பாதையை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றதால் இன்று தரிசனம் தாமதமாக தொடங்கியது.