Advertisment

Tamil Nadu news today : மருத்துவ படிப்புகளில் சேர 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்

News in Tamil Live Updates

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: இன்று (ஜூன்.11) தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள், லேட்டஸ்ட் செய்திகள், வானிலை அறிவிப்புகள், சினிமா அப்டேட்ஸ், விளையாட்டு தொடர்பான செய்திகள் என பல களங்களில் இருந்தும் உங்களுக்கான அப்டேட்ஸ்களை உடனுக்குடன் இந்த செய்தியில் வழங்குகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம்.

Advertisment

மேலும் படிக்க - Tamil Nadu news today live updates: ஜூன்.12ம் தேதிக்கான முக்கிய செய்திகள் தமிழில் உடனுக்குடன் அரிய இங்கே க்ளிக் செய்யவும்

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழ்நாடு முக்கிய செய்திகள்



























Highlights

    20:33 (IST)11 Jun 2019

    மருத்துவ படிப்புகளில் சேர 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்

    மருத்துவப் படிப்பில் சேர இதுவரை ஆன்லைனில் 45 ஆயிரத்து 26 மாணவர்கள் பதிவு  செய்திருப்பதாக  மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

    35 ஆயிரத்து 386 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் வரும் 20-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    19:46 (IST)11 Jun 2019

    அதிமுக ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

    எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது. அதிமுகவில் நிலவும் பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.  ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    19:26 (IST)11 Jun 2019

    Latest Tamil News : உலககோப்பை கிரிக்கெட் : மழை விளையாடியதால், இலங்கை- வங்கதேச போட்டி ரத்து

    உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டி துவங்குவதற்கு முன்பே மழை விளையாட துவங்கிவிட்டது. இதன்காரணமாக, டாஸ் போடாதநிலையில், போட்டி கைவிடப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

    18:50 (IST)11 Jun 2019

    நடிகர் சங்க தேர்தல் நல்லபடியாக நடக்க வேண்டும் : நடிகர் விஜய்சேதுபதி

    வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தல், நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். தான் நடித்து விரைவில் வெளிவர உள்ள சிந்துபாத் படம் தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது,  நடிகர் சங்கத்தில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது, அது கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தால் நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி * சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் உள்ளனர், அதனால் நல்லபடியாக தேர்தல் நடந்து முடிய வேண்டும். நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு என இப்போது கூற முடியாது என விஜய் சேதுபதி கூறினார்.

    18:09 (IST)11 Jun 2019

    அரசுப் பள்ளிகளில் புதிதாக 2 லட்சம் மாணவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு யுனெஸ்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படும் ஓப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். பள்ளி வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் அரைமணி நேரம் விளையாடும் வகையில் திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    17:34 (IST)11 Jun 2019

    Latest tamil news : ஸ்டெர்லைட் வழக்கு : நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவனி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும்

    16:34 (IST)11 Jun 2019

    மக்களவை இடைக்கால சபாநாயகர் நியமனம்

    மக்களவை இடைக்கால சபாநாயகராக பா.ஜ., எம்.பி வீரேந்திர குமார் நியமனம்.  புதிய எம்.பி.க்களுக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

    16:01 (IST)11 Jun 2019

    Latest Tamil News : உள்துறை அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்

    உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் டெல்லி நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

    15:22 (IST)11 Jun 2019

    மின்வாரிய சட்டவிரோத குடியிருப்பு - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி

    மின்வாரிய சட்டவிரோத குடியிருப்பு ஒதுக்கீட்டை கண்டுபிடிக்க தனி குழு அமைக்கவும் உத்தரவு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மின் வாரியத்தில் குடியிருப்புகள் ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பராமரிக்கவும் 4 வாரத்தில் தனி இணையதளம் உருவாக்க மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    15:14 (IST)11 Jun 2019

    இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

    ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 'ராஜராஜசோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் பறிக்கப்பட்டது' என ரஞ்சித் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    14:13 (IST)11 Jun 2019

    நான்கு தமிழர்கள் உயிரிழப்பு?

    கடும் வெப்பம் காரணமாக உத்தரபிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்த நான்கு தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இருந்து அவர்கள் சுற்றுலா சென்றதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    13:33 (IST)11 Jun 2019

    World Cup 2019 - ஷிகர் தவான் விலகல்?

    விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    13:08 (IST)11 Jun 2019

    70 லட்ச மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு

    70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும், நாளை மறுநாள் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். பள்ளி மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெறும் வரை, பழைய பாஸ்களையே பயன்படுத்தலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

    12:50 (IST)11 Jun 2019

    Tamil News Live : நடிகர் விமல் மனு தள்ளுபடி

    நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விமல், ரமேஷ்கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சந்தா முறையாக செலுத்தாததால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் ஐசரிகணேஷ் தலைமையிலான அணியில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    12:28 (IST)11 Jun 2019

    மக்களவை இடைக்கால சபாநாயகர்

    மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. வருகின்ற 17 ஆம் தேதி மக்களவை கூட உள்ளது. இந்நிலையில், மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய எம்.பிக்களுக்கு வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:54 (IST)11 Jun 2019

    Latest News in Tamil: முன்னாள் அமைச்சர் விலகல்

    முன்னாள் அமைச்சர் இன்ப தமிழன் அமமுகவில் இருந்து விலகி, முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

    11:05 (IST)11 Jun 2019

    Sterlite Case: நீதிபதி சசிதரன் விலகல்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வேதாந்தா வழக்கை தான் விசாரிக்கவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விசாரிக்க பட்டியலிட்ட நிலையில், நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.

    10:43 (IST)11 Jun 2019

    Surya Pays Condolences to Crazy Mohan: கிரேஸி மோகன் இறுதி அஞ்சலியில் சூர்யா

    நடிகர் சூர்யா, நடிகர் ஜெயராம் உள்ளிட்ட உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள், கிரேஸி மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதுபோல், இறுதி அஞ்சலி செலுத்திய இயக்குனர் சரண், 'கமல்ஹாசனின் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கு தலைப்பு வைத்ததே கிரேஸி மோகன் தான்' என்று தனது நிலைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

    10:05 (IST)11 Jun 2019

    Latest News in Tamil : அற்புதம்மாள் உருக்கம்

    பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தனது ட்விட்டரில், "காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது.இன்னும் அந்த இரவு விடியல.அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு" என்று பேரறிவாளன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    09:38 (IST)11 Jun 2019

    Crazy Mohan Iruthi Anjali - கிரேஸி மோகன் இறுதி அஞ்சலி

    'கிரேஸி மோகன் எப்போதும் நேர்மறையாகவே பேசுவார்' - அஞ்சலி செலுத்திய பின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்

    09:13 (IST)11 Jun 2019

    Crazy Mohan Death - கிரேஸி மோகனின் கடைசி நிகழ்ச்சி

    கிரேஸி மோகன் நாடகம் மூலம் நகைச்சுவை வைத்தியம் செய்தவர். நான் நடத்திய பொற்றாமரை இலக்கிய அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே அவரின் கடைசி நிகழ்ச்சி - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

    08:42 (IST)11 Jun 2019

    Vayu Cyclone at Gujarat - தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

    அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயலால், தமிழகத்தின் பருவ மழைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும், வாயு புயலால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக மழை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    08:32 (IST)11 Jun 2019

    வாயு புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா?

    குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதியில் ஜுன் 13 இல் வாயு புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வாயு புயலால் ஜுன் 13 ஆம் தேதி 135 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    08:27 (IST)11 Jun 2019

    Vayu Cyclone : உருவானது வாயு புயல்

    Tamil Nadu news today live updates: தென்கிழக்கு அரேபிக் கடலில் காற்றழுத்தாழ்வு உருவாகியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 'வாயு' புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கிரேஸி மோகனின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று நடக்கிறது. திரை நட்சத்திரங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

    Tamil Nadu news today live updates: ரசிகர்களை சிரிக்க வைத்த கிரேஸி மோகன் நேற்று(ஜூன்.10) காலமானார். திடீர் நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன், மதியம் 2 மணிக்கு காலமானார். கமல்ஹாசன், இயக்குனர் சரண், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர்கள் விவேக், செந்தில், எஸ்.வி.சேகர், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார். அவரின் இந்த பேச்சு சமூக தளங்களில் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

    Tamilnadu Tamilnadu Weather
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment