Amitabh Bachchan, son Abhishek test positive for Covid-19: பிக் பி என அழைக்கப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அவர். தனது குடும்பத்தினருக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், முடிவுக்கு காத்திருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்தார் அமிதாப். அவருக்காக ரசிகர்களும், அபிமானிகளும் பிரார்த்தனைகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் அவரது மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அவரே ட்விட்டரில் நள்ளிரவுக்கு பிறகு அறிவித்தார். லேசான அறிகுறிகள் தென்பட்டதாகவும், தனக்கும் தனது தந்தைக்கும் காலையில் பாசிட்டிவ் என தெரியவந்ததாகவும், யாரும் இதனால் பீதி அடையவேண்டாம் என்றும் அபிஷேக் தெரிவித்தார்.
முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை "PAUL HARRIS FELLOW" என அழைப்பதாக, அமெரிக்காவில் உள்ள ரோட்டரி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்ததாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நோய் தடுப்பு, உலக சமாதானம், சுகாதாரம், குடிநீர், தாய்சேய் நலம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை, The Rotary foundation of Rotary International என்ற நிறுவனம் இவ்வாறு அழைத்து கவுரப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பிக் பி என அழைக்கப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அவர். தனது குடும்பத்தினருக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், முடிவுக்கு காத்திருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்தார் அமிதாப். அவருக்காக ரசிகர்களும், அபிமானிகளும் பிரார்த்தனைகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் அவரது மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அவரே ட்விட்டரில் நள்ளிரவுக்கு பிறகு அறிவித்தார். லேசான அறிகுறிகள் தென்பட்டதாகவும், தனக்கும் தனது தந்தைக்கும் காலையில் பாசிட்டிவ் என தெரியவந்ததாகவும், யாரும் இதனால் பீதி அடையவேண்டாம் என்றும் அபிஷேக் தெரிவித்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னை சார்ந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடந்துள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
T 3590 -I have tested CoviD positive .. shifted to Hospital .. hospital informing authorities .. family and staff undergone tests , results awaited ..
All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested !— Amitabh Bachchan (@SrBachchan) July 11, 2020
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜ் வீடு மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்லவைத்து வீடியோ பதிவு செய்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது சேவையைப் பாராட்டி அமெரிக்க ரோட்டரி சங்கத்தின் சார்பாக 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மட்டும் இன்று 1,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூர் - 346, மதுரை - 277, செங்கல்பட்டு - 237, தூத்துக்குடி - 175, சேலம் - 136, வேலூர் - 135, கன்னியாகுமரி - 133, திருச்சி - 128, காஞ்சிபுரம் -119, தேனி - 119, கள்ளக்குறிச்சி - 102, விருதுநகர் - 94, ராமநாதபுரம் - 81, நெல்லை - 80, கோவை - 71, சிவகங்கை - 67, தென்காசி - 65, திருவண்ணாமலை - 64, ராணிப்பேட்டை - 50, விழுப்புரம் - 44, ஈரோடு - 42 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன்: ஒருங்கிணைந்த மருத்துவ படிப்பு இல்லாததே சித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை உருவாகிறது. சித்த மருத்துவத்தை மேம்படுத்த ஆசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 5 லட்சத்து 15 ஆயிரத்து 385 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.78% ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.பி அன்பழகன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கோவிட்-19ல் இருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் தனி அறையில் உள்ளார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் கண்பார்வை பாதிக்கும் என்பதால் ஆன்லைன் கல்வி முறைக்கு பதில் தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தவுடன் இளைஞர்கள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: பள்ளி மாணவரக்ளுக்கு ஜூலை 14-ம் தேதி முதல் பழனிசாமி பாடபுத்தகங்களை வழங்குகிறார். வீடுகளுக்கே சென்று பாட புத்தகங்களை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸிற்கு மருத்துவ பரிசோதனை செய்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராமங்களில் கொரோனா தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இது குறித்து ட்வீட்டரில், " கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவு செய்தார்
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து முழு மருத்துவ ஓய்வில் இருந்து வருகிறேன். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பாக வரும் 15ம் தேதி செய்தியாளர்களிடம் நேரில் சந்தித்து திட்டமிட்டிருப்பதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி #COVID__19 நிலை குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்தார்.
👉 pic.twitter.com/2OdC4vmoP4@PMOIndia @PIB_India @airnews_Chennai @DDNewsChennai @ROBCHENNAI_MIB
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) July 11, 2020
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பெருந்தொற்று நிலை குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கொரோன பெருந்தொற்று தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க , வரும் ஜூலை 14ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு தேர்வும் ரத்து என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகும் நிலையில் டெல்லி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது . டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம் என்றார். மேலும், தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தந்தை, மகன் மரணம் வழக்கு விசாரணை தொடர்பாக சாத்தான்குளம் சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் சென்றுள்ளனர். விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. குழு சாத்தான்குளம் சென்றுள்ளனர். ஜெயராஜின் கடை, வீடுகளில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. சாத்தான்குளத்தில் 2 குழுக்களாக பிரிந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.
ஈரானில் இருந்து தமிழக மீனவர்கள் 681 பேரை மீட்டதற்கு நன்றி தெரிவித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை முதல்வர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதற்கு முதல்வர் பழனிசாமி நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் தேவை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்துள்ளார். பெருந்தொற்று காரணத்தால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் நேரிடும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் , செப்டம்பர் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் உள்ளது என கூறியுள்ளார்.
.சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ இன்று விசாரனையை துவங்குகிறது. சி.பி.ஐ அதிகாரிகள் தங்கியுள்ள நெல்லை விருந்தினர் மாளிகைக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் வருகை தந்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் மேலும் சில ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மூடி சீல் வைக்கப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கொண்டு வந்தனர்.
அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகப்படவுள்ளது. சமூக விலகலை பின்பற்றி வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறைப்பு- திங்கட்கிழமை முடிவாகிறது
தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க தகுதியானவர்கள் முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்தாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த பிளாஸ்மா தெரபி முறையை பின்பற்ற இருப்பதாகவும், 18 முதல் 65 வயதுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றும் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றும், தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights