நிபா வைரஸ் எதிரொலி : கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு வார்ட்

வாளையாறு சோதனைச் சாவடியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு பின்பே கோவைக்குள் அனுமதி

Nipah Virus High Alert, Tamil Nadu Kerala Border districts,
Nipah Virus High Alert, Tamil Nadu Kerala Border districts,

Nipah Virus High Alert : 2018ம் ஆண்டில் நிபா வரைஸ் தாக்குதலில் 17 நபர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது எர்ணாகுளத்தில் இருக்கும் இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வௌவால் மற்றும் அணில் மூலமாக பரவும் இந்த வைரஸ் தொற்றினால் மூன்று நாட்களுக்கும் மேலாக தலைவலி, இருமல், மூளைக்காய்ச்சல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். விரைவாக இந்த நோய் பரவக்கூடும் என்பதால் அண்டை மாநில எல்லைகளில் சோதனை கூடங்கள் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன மாநில அரசுகள்.

தமிழக – கேரள எல்லையில் அமைந்திருக்கும் தேனி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள் தினமும் டெய்லி அவுட்ப்ரேக் ரிப்போர்ட்டினை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்க நடவடிக்கைகள் துரித கதியில் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நமக்கு கிடைக்கும் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதாகவும், மருத்துவக்குழு போதுமான விழிப்புணர்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.  தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடக எல்லையிலும்  சாம்ராஜ்நகர், மைசூர், குடகு, தக்‌ஷினா கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, ஷிவமொக்கா, மற்றும் சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ்  எப்படி பரவுகின்றது ?

சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்றும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார். நிபா தொற்று குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அறிக்கைகளை பெற்று வருவதாகவும் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு வார்டு

கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகம் வருபவர்கள் மூலம் நிபா வைரஸ் பரவலை தடுக்க வாளையாறு சோதனைச்சாவடியில் சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்காக 24 மணிநேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nipah virus high alert 6 tamil nadu kerala border districts are under monitor

Next Story
இன்றைய வானிலை : கரூர், சேலம் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழைChennai weather update south Tamil Nadu gets heavy rainfall alert
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com