NIRF Ranking 2019 : மனித வள மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு வருடமும் நேஷ்னல் இன்ஸ்டிடியூசனல் ரேங்கிங் ஃப்ரேம்ஒர்க் என்று பட்டியல் ஒன்றை தயாரித்து வெளியிடுவது வழக்கம். தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்.
பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் முதல் இடம் பிடித்தது. அதே போல் வெளியிடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கான பட்டியலில் கடந்த ஆண்டைப் போலவே டெல்லியின் எய்ம்ஸ் மருத்துமனை முதலிடம் பிடித்துள்ளது.
தலைசிறந்த மேலாண்மைக் கல்லூரிகளின் பட்டியலில் ஐ.ஐ.எம். அகமதாபாத் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த சட்டக் கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது தேசிய சட்டப் பல்கலைக்கழகம் , பெங்களூரு.
NIRF Ranking 2019 : சிறந்த 10 மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் இதோ !
- எம்ய்ஸ் மருத்துவக் கல்லூரி, டெல்லி
- போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் (PGIMER Chandigarh)
- க்றிஸ்டின் மெடிக்கல் காலேஜ், வேலூர்
- சஞ்சய் காந்தி போஸ்ட்கிராஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயன்ஸ்
- அம்ரித விஷ்வ வித்யபீதம்
- பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி
- கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரி
- ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜூவேட் மெடிக்கல் எஜூகேசன் அண்ட் ரிசர்ச்
- இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் அண்ட் பிலைரி சயின்ஸ்
- கிங் ஜார்ஜ்ஸ் மெடிக்கல் யுனிவர்சிட்டி
மேலும் படிக்க : ஐஐடி மெட்ராஸ்க்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படாதது ஏன் ?