Tamil Nadu Weather Forecast, Nivar Cyclone: தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘நிவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் முன் காப்பது, தவிர்ப்பது என்று பொருள்.
குட்டீஸ் ஃபேவரெட்… உருளைக்கிழங்கு தோசை!
அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும்.
சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவில் நிகர் புயல் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80-லிருந்து 90 கிலோ மீட்டர் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 100 லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக, 23-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை இருக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 24-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதோடு, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை இருக்கும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10,12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் : சிபிஎஸ்இ
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதால், நவம்பர் 25-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் அச்சம் காரணமாக மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், நாகை, தஞ்சாவூர் உட்பட தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”