தமிழக அரசில் பணிபுரிந்து வரும் யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள், கேள்வி கேட்டால் தலைமை செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே கூறியது, மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கெல்லாம் புது போன் வாங்க வேண்டாம்… எளிமையான 5 டிப்ஸ் உங்களுக்கு!
பயிற்றுனர்கள் சொன்ன அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்து கலந்துக் கொண்ட மருத்துவர்களுக்கு புரியாததால், ஆங்கிலத்தில் அந்த விஷயங்களை விளக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டனர். சில பங்கேற்பாளர்களின் கூற்றுப்படி, மருத்துவர்களின் பரிந்துரையை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடெச்சா ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது இந்தி புரியாத அனைவருமே அமர்வில் இருந்து வெளியேறலாம் என்று அந்த அதிகாரி கூறினார். அதோடு ஆங்கிலம் நன்றாக பேச முடியாது என்றும் கூறினார். பங்கேற்பாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல முற்பட்டபோது, "சிக்கல் உருவாக்கியவர்களை" அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் இந்த விஷயத்தை ஆலோசிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
மொரார்ஜி தேசாய் தேசிய நிறுவனம் ஏற்பாடு செய்த ஆயுஷ் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கான மாஸ்டர் பயிற்சியாளர்களின் மூன்று நாள் மெய்நிகர் பயிற்சியில் தான் இவ்வாறு ஒரு புதிய மொழியியல் சர்ச்சை கிளம்பியுள்ளது. புதிய கல்விக் கொள்கை ஏற்கனவே இந்தி மொழிக்கு ஆதரவாக இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பயிற்சி திட்டத்தின் இறுதி நாளில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. முதல் நாளான ஆகஸ்ட் 18-ம் தேதியிலிருந்தே சரியான தகவல்தொடர்பு இல்லாதது ஒரு பிரச்சினையாக இருந்தது என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் இருந்து பங்கேற்ற 400 பேரில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். “எங்களுக்கு இந்தி புரியாததால் பயிற்சியாளர்களை ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஹெல்தி… செய்றது ரொம்ப ஈஸி: சாக்லெட் பனானா கேக்!
’ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவிலிருந்து பங்கேற்றவர்களுக்கும் இதே சிக்கல் இருந்துள்ளது. ஆனால் பங்கேற்பாளர்களில் பெரும் பகுதியினர் இந்தி தான் ‘ராஷ்ட்ரா பாஷா’ என்று தெரிவித்து, இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என அறிவிறுத்தினர்’, என தமிழகத்தில் இருந்து கலந்துக் கொண்ட ஒரு மருத்துவர் தெரிவித்தார்.
எனவே, இந்தத் திட்டத்தின் பெரும்பகுதி தெற்கிலிருந்து பங்கேற்றவர்களுக்கு கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகள் போல இருந்தது, என்றார். ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட இந்தியில் மட்டுமே பேசியதாக, இந்திய இயற்கை மற்றும் யோகா பட்டதாரிகளின் மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”