/tamil-ie/media/media_files/uploads/2020/05/EXJmZGTU4AMF7P-.jpg)
Ondrinaivom vaa dmk mla dr saravanan provides chicken meat to people
Ondrinaivom vaa dmk mla dr saravanan provides chicken meat to people : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 54 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக இன்று முதல் ஊரடங்கும், சில இடங்களில் தளர்வுகளுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவத் துவங்கிய சமயத்தில் பலரும், இறைச்சி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிரித்துவிட்டனர். முட்டை மற்றும் கோழி, ஆட்டுக்கறியின் விலை கடுமையாக சரிவை சந்தித்தது. ஆனால் நாட்களாக நாட்களாக, நான் வெஜ் இல்லாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்ற நிலைமையை மக்கள் அறிய துவங்கியிருக்கின்றனர்.
மேலும் படிக்க : அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்
அரசு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறது. அதே சமயத்தில் எதிர்கட்சியினர், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் ஆன உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர். இதில் மிகவும் முக்கிய பங்காற்றுவது திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற செயல்பாட்டு முறை தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மக்களின் தேவை அறிந்து, திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தல்படி பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறேன். அதனை தொடர்ந்து மதுரை அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு இலவசமாக கோழிக்கறி, அரிசி, பருப்பு,காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை இன்று (04.05.2020) வழங்கினேன். #Ondrinaivomvaapic.twitter.com/Xf8Hvi81KW
— Dr.P.Saravanan MD.,MLA (@mdr_saravanan) May 4, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் ஒரு படி மேலே போய், பொதுமக்களுக்கு ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கோழிக்கறி வாங்கி கொடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கு முன்பே சரவணன் தமிழக சட்டசபைக்கு மாஸ்க்குடன் சென்று அனைவரின் கவனத்தையும் பெற்றவர். இவரின் தொகுதிக்கு உட்பட்ட விரகனூர், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகள் மொத்தமும் கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்தப்பட்டது. டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்தை தெளிக்கும் புது முயற்சியில் இறங்கினார்.
தற்போது மதுரை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளோடு கோழிக்கறியையும் கொடுத்து வருகிறார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அவருக்கு பெற்று தந்துள்ளது.
மேலும் படிக்க : கொரோனா பாதிப்பு விகிதம் குறைவு – மரணங்களோ அதிகம் : மாலேகானில் நடப்பது என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.