OPS son ravindranath kumar : தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில். அக்கோவிலில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோவிலுக்கு உபயம் அளித்தவர்களுக்காக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னீர் செல்வம், மற்றும் அவருடைய மகன் ஓ.பி.ரவிந்திரநாத் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
குச்சனூர் கோவில் கல்வெட்டு
இதில் கேள்வி எழுப்பும் வண்ணமாக மாண்புமிகு தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு ஜெ.ஜெயலலிதா அவர்களின் பெயரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத் குமாரின் பெயரும் இடம் பெற்றறிருந்தது.
ஏப்ரல் மாதம் 18ம் தேதி தேனி உட்பட 38 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் வடுகப்பட்டி மற்றும் பாலசமுத்திரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 19ம் தேதி) நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளே மே 23ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் ரவீந்தர்நாத் குமாரின் பெயர் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த கல்வெட்டினை உடனே எடுக்க, பன்னீர் செல்வம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அமமுக கட்சியின் தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Godse Remark Live Updates : மோடியின் கருத்திற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை – கமல் ஹாசன்