scorecardresearch

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் – வைத்திலிங்கம்

சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்து கட்டுப்படுத்தாது என நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான் – ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

Vaithilingam request to BJP intervene in AIADMK, Vaithilingam request to BJP to merge EPS-OPS Team, AIADMK, பாஜக தலையிட்டு இபிஎஸ் - ஓபிஎஸ் இணைக்க வேண்டும், வைத்திலிங்கம் திடீர் கோரிக்கை, இபிஎஸ், EPS, vaithilingam, AIADMK, Sasikala

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இன்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது.

இது தொடர்பாக இன்று தஞ்சையில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியது போல உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோர்ட் எந்த கருத்தும் கூறவில்லை.

இதையும் படியுங்கள்: ‘அம்மா கோவிலில் வேண்டினேன்; அவர் கொடுத்த அருள் இது’: உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி இ.பி.எஸ் பேச்சு

மேலும், சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கை எங்களது கருத்து கட்டுப்படுத்தாது என கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான். நாங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம் என்றார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops supporter vaithilingam says we would appeal against general council meeting resolutions

Best of Express